வியாழன், 19 ஜூலை, 2018

கூகிள் நிறுவனத்துக்கு அபராதம் .. ஆதிக்கத்தை நிலைநாட்ட மோசடி.. அம்பலம் !

தினத்தந்தி : ஆண்ட்ராய்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி இண்டெர்நெட் பயன்பாட்டில்
தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட கூகுள் நிறுவனம் முயற்சித்ததாக கூறி ஐரோப்பிய யூனியன் சுமார் 3.42 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
 ஆதிக்கத்தை நிலைநாட்ட மோசடி - கூகுள் நிறுவனத்துக்கு 3.42 லட்சம் கோடி ரூபாய் அபராதம் பிரசெல்ஸ்: பிரபல தேடுபொறியான அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் இணைய உலகில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், இணையதளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆண்ட்ராய்ட் அமைப்பை கூகுள் நிறுவனம் விதிகளை மீறி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதன் மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்துள்ளதாகும்
இந்த புகாரின் பேரில் கடந்த மூன்றாண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்திற்கு இன்று 5000 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.34,26,25,00,00,000) அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், கூகுள் தன்னுடைய சட்டவிரோத செயல்பாட்டை 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். மீறினால் மேலும் அபராதம் விதிக்கப்படும் அல்லது கூகுள் தன்னுடைய தினசரி வருவாயில் 5 சதவீதத்தை ஐரோப்பிய யூனியனுக்கு செலுத்த வேண்டி வரும் என ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது. இந்த அபராத தொகையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக