வியாழன், 19 ஜூலை, 2018

கலைஞர் மருத்துவ மனையில் அனுமதி

பிந்திய செய்தி  : சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார் திமுக தலைவர் கலைஞர் டிரக்கியாஸ்டமி குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் பொருத்தப்பட்டதையடுத்து வீட்டிற்கு புறப்பட்டார்
விகடன் - கார்த்திக்.சி : தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி, சிறிய
அளவிலான அறுவைசிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கலைஞர்  வயது முதிர்வின் காரணமாகவும், உடல்நலக் குறைபாட்டின் காரணமாகவும் ஒரு வருடத்துக்கும் மேலாக கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் ஓய்வில் இருந்துவருகிறார். அவருக்கான பணிவிடைகளை உதவியாளர்கள் செய்துவருகின்றனர்.
கலைஞர் பேரக் குழந்தைகளுடன் விளையாடும் போட்டோக்களும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகிவந்தன.
அவருக்கு, சிறிய அளவில் உடல்நலக் குறைபாடு ஏற்படும்போது, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், சிறிய அறுவைசிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இரண்டு நாள்கள் வரை மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக