வியாழன், 19 ஜூலை, 2018

அவினாசியில் தீண்டாமை கொடுமை... சாதி என்பது விதியா... பா. ரஞ்சித் கொதிப்பு

Kathiravan Mumbai : போராட்டம் வெற்றி. சத்துணவு அமைப்பாளர் பாப்பம்மாளுக்கு அதே இடத்தில் மீண்டும் பணி நியமனம், சாதி வெறியர்கள் மீது வழக்கு பதிவு... களத்தில் நின்ற அனைவருக்கும் நன்றி... "மரியாதைக்குரிய பாப்பம்மாள் அவர்களை மீண்டும் அதே பள்ளியில் அமர்த்தப்படுவர் , சம்பத்தப்பட்ட அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மூலம் நடவடிக்கை " - ஆதிதிராவிட நலத்துறை
Director Pa.Ranjith tweet about Anganwadi cook transfer incident
tamiloneindia லக்ஷ்மி பிரியா : சென்னை: அவினாசியில் தீண்டாமை கொடுமையால் அங்குள்ள சமையலரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்த அவலத்தை இயக்குநர் பா.ரஞ்சித் கண்டித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவினாசியில் திருமலைக்கவுண்டம்பாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சமையலராக பாப்பம்மாள் என்பவர் சமையலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு ஜாதியை சேர்ந்தோர் பாப்பம்மாள் சமைத்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பள்ளி முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேறு ஒருவரை நியமித்து சத்துணவு சமைக்க வைத்துள்ளனர். இதையடுத்து பாப்பம்மாளை அவினாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு தமிழகம் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குநர் பா ரஞ்சித் கூறுகையில் #சாதிஎன்பதுவிதி??? அப்படியா..?? இவுங்க அழுகைக்கு பரிதாபம்லாம் பட வேணாம்..திரும்பவும் அந்த பள்ளிகூடத்தலதான் சமைக்கனும்.. என்ன பன்னலாம் சொல்லுங்க ???? இவுங்கள இடமாற்றம் செய்த அரசு அதிகாரிய என்ன பன்ன போறோம்???? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக