திங்கள், 11 ஜூன், 2018

G 7 உச்சி மாநாட்டில் ட்ரம்ப் கோபத்தோடு வெளியேறினார் .. ஜஸ்டின் மீது ட்ரம்ப் காய்ச்சல் ,,


‘Special place in hell’: Trump aides hurl insults at Trudeau in unprecedented U.S. attack on Canadian leader By Daniel DaleWashington Bureau Chief Bruce Campion-SmithOttawa Bureau
மாலைமலர்: கனடாவில் நடந்து முடிந்த ஜி7 உச்சி மாநாட்டில் கருத்து வேறுபாடு காரணமாக டிரம்ப் வெளியேறி காட்டமாக ட்வீட் செய்ததற்கு, ஜெர்மனி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
#G7 #G7Summit கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் ஜி-7 உச்சி மாநாடு கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே நகரில் கடந்த 8, 9 தேதிகளில் நடந்தது. உக்ரைனின் ஒரு பகுதியாக விளங்கிய கிரிமியாவை தன்னோடு இணைத்துக்கொண்டதால் இந்த அமைப்பில் இருந்து ரஷியா நீக்கப்பட்டது.
ஆனால் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷியா விரும்பியது. இதை டிரம்ப் பேசும்போது வெளிப்படுத்தினார். அப்போது அவர், ரஷியா மீண்டும் இந்த அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.< ஆனால், இதில் ரஷியா பங்கேற்கக்கூடாது என்று பிற உறுப்பு நாடுகள் கருத்து கொண்டு உள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் திட்டவட்டமாக தெரிவித்தார்.


மேலும், உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது டிரம்ப் இறக்குமதி வரியை விதித்து இருப்பதும் அவருக்கு எதிரான நிலையை பிற நாடுகள் எடுக்க வைத்து விட்டன. டிரம்பின் இந்த முடிவு சட்ட விரோதமானது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவிக்க, கடுப்பான டிரம்ப் கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே அங்கிருந்து வெளியேறி, சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதனை அடுத்து, அனைத்து தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கூட்டறிக்கை வெளியிட்டனர். விமானத்தில் இருந்த படியே ஜி7 மாநாடு குறித்து காரசாரமாக டிரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டார். மேலும், ஜி7 கூட்டறிக்கைக்கு தான் அளித்த ஒப்புதலை டிரம்ப் திரும்பப்பெற்றார்.

மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கடுமையான விமர்சனத்தையும் டிரம்ப் முன்வைத்திருந்தார். இந்நிலையில், டிரம்ப் ட்வீட் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜெர்மனி வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ், “அளவுக்கு அதிகமாக வைத்திருந்த நம்பிக்கையை ஒற்றை ட்வீட் மூலம் குறுகிய நேரத்தில் நீங்கள் உடைத்து விட்டீர்கள். அமெரிக்காவே முதன்மை என்பதற்கு ஐரோப்பிய ஒன்றியமே பதிலாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக