புதன், 6 ஜூன், 2018

கமலஹாசன், ரஜினிகாந்த் .. தமிழகத்தின் எய்ட்ஸ் கிருமிகள்.. இவர்களை சமூக அரசியல் பேச அனுமதிப்பது தமிழகத்தை...

Sowmian Vaidyanathan : யார் இந்த கமலஹாசன்? உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, இனி காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை திறந்து விடும் அதிகாரம் கர்நாடக அரசிடமிருந்து பறிக்கப்பட்டு, அது ஒரு நடுநிலை அமைப்பான காவிரி மேலாண்மை வாரியத்திடம் ஒப்படைப்பட்டு... அந்த வாரியமும் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில்....
தமிழ்நாட்டு மக்களை எல்லாம் எத்தனை பெரிய கேணையனுங்களாக நினைத்திருந்தால்... கர்நாடக முதல்வர் குமாரசாமி, இந்த கமலஹாசனை சந்திக்க அனுமதித்து, அந்த சந்திப்பில் இனி கர்நாடகாவோடு பேச்சு வார்த்தை நடத்தி தான் தமிழகம் தண்ணீர் பெற வேண்டும். அதுவே நல்லது என்று கூட்டாக கமலஹாசனுடன் சேர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி தந்திருக்க முடியும்?! யார் இந்த கமலஹாசன்?
தமிழக ஆட்சியாளரா? அல்லது எதிர்க்கட்சியா? அல்லது விவசாய சங்கங்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியா? அல்லது தேர்தல் களத்தைக் கண்டு தனக்கான மக்கள் செல்வாக்கு இத்தனை சதவிகிதம் இருக்கின்றது என்று நிரூபித்தவரா?!
இன்றைய தேதி வரையிலும்.... ஏன்? நாளைக்கும் கூட நடிப்பதற்கான தனது கால்ஷீட்டை கொடுத்து பணம் பெற்றிருக்கும் ஒரு தொழில் முறை நடிகனிடம் இரு மாநில தண்ணீர் பிரச்சினை குறித்து ஒரு மாநில முதல்வர் விவாதித்து கூட்டாக பேட்டி தருகின்றார் என்றால், அவர் ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாள்கள் என்று எண்ணுகின்றாரா?!


இப்படி வைத்துக்கொள்ளுங்கள்... ஒரு வேளை உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கு வெறும் 25 டிம் எம் சி தண்ணீர் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு தந்தால் போதும் என்று வந்திருந்தால்.... அதைக் கண்காணித்து செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருந்தால்.....
அப்படியான நிலையில்... கன்னட நடிகர் ஒருவர் தமிழகம் வந்து முதல்வர் எடப்பாடியைச் சந்தித்து, கோர்ட் தீர்ப்பை எல்லாம் நாம் தூக்கி அப்பால் வைத்து விட்டு, பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண்போம்... தமிழகத்திற்கு தேவையான கூடுதல் நீரை தர கர்நாடகா முதல்வர் தமிழக முதல்வருடன், விவசாய சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒரு பேட்டியை சென்னையில் கொடுத்து விட்டு....
கர்நாடகா எல்லையில் கால் வைத்து விட முடியுமா? இது சரியா? தவறா? என்று அங்குள்ள ஊடகங்கள் தான் விவாதம் நடத்த முடியுமா? அல்லது அப்படித்தான் செய்வார்களா?!
கமலஹாசன் செய்திருப்பது, எவ்வளவு பெரிய முட்டாள்தனம், அறிவுகெட்டத்தனம், அயோக்கியத்தனம் என்பது கூட இங்குள்ள தமிழர்களுக்கு புரியவில்லை என்றால்... அல்லது புரிந்தும் வேறு அரசியல் காரணங்களுக்காக அதைக் கண்டுங்காணாமலோ அல்லது ஆதரித்தோ பேசினால் அதை விட கேவலம் ஒன்றுமில்லை..!
கமலஹாசன், ரஜினிகாந்த் இவர்களெல்லாம் தமிழகத்தின் எய்ட்ஸ் கிருமிகள். இவர்களை இதற்குமேல் இங்கே சமூக அரசியல் பேச அனுமதிப்பது தமிழகத்தை சுடுகாடாக்கிவிடும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக