திங்கள், 11 ஜூன், 2018

இயேசு அழைக்கிறார் என்று ஆயிரம் கோடிகள் கண்ட மோடி ஆதரவு பேந்தகொஸ்த்து தினகரன் குழுமம்

Shalin Maria Lawrence : முதலில் DGS தினகரன் வந்தார்.
ச‌ஃ‌பாரி சூட் போட்டுகொண்டு என்றோ கார் விபத்தில் இறந்துபோன தன் பெண்ணை பற்றி பேசி பேசி ,கண்ணை பிழிந்து பிழிந்து அழுது பல கோடிகளை சம்பாதித்தார்.
பின்பு அவர் மகன் திரு பால் தினகரன் யேசு அழைக்கிறார் என்று காட்டை வளைத்து போட்டு கல்லூரி கட்டி ஆயிரம் ஆயிரம் கோடி சம்பாத்திருக்கிறார்.
தகப்பனும் மகனும் ஏசுவை பேக்கேஜிங் செய்து விற்றனர்.
பாஸ்டர்கள் என்றாலே பாரின் கார், விலையுயர்ந்த மேக் அப் ,இம்போர்டட் துணிமணிகள் என புது ட்ரெண்டை உருவாக்கினார்கள்.
நாடார் பேந்தக்கோஸ்து என்று சொல்லப்படும் புது விதமான நாடார் மத மாபியாகளை உருவாக்கினார்கள்.
நாடு முழுவதும் கத்தோலிக்க மற்றும் CSI பாதிரியார்கள் ஏழை எளியோர் ,நோயுற்றவர்களுக்கு காடுகளிலும் ,பாஜக ஆதிக்க இடங்களில் உயிர் பயத்தோடு சேவகம் செய்து கொண்டிருக்க இந்த ஜாதிய பேந்தக்கோசுதேக்கள் மட்டும் நன்று உண்டு உடுத்தி,தசமபாக காசுகளை ஏப்பம் விட்டு கொண்டிருக்கின்றன.
கடந்த மூன்று மாதங்களாக கத்தோலிக்க ஆயர்கள் இந்தியா முழுவதும் பாஜக அரசை வரும் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என்று மக்களிடம் நோட்டீசுக்கள் விநியோகித்து பாஜகவின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் வேளையில் இந்த ஆசுத்த ஆவி தினகரண் மாற்று குழுவினர் மோடிக்கு ஆதரவு தெரிவிப்பது ,பாஜக அரசுக்கு ஓட்டு போட தூண்டுவது என்று திருட்டு வேலையில் ஈடுபட்டது கொண்டிருக்கிறது.

தினகரன் போன்ற மத மாஃபியாக்களை நம்புவோர் மூளை இல்லாத ஆடுட்டு மந்தைக்கு சமம்.ஏசு தான் முக்கியம் என்றால் ,காணிக்கை என்ற பெயரில் கோட்டு சூட்டு போட்டு ஏமாற்றும் பேந்தகோஸ்தே சாத்தான்களை புறக்கணிக்க வேண்டும் உண்மை கிறிஸ்தவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக