ஞாயிறு, 13 மே, 2018

கர்நாடகா .. முந்தப்போவது EVM இயந்திரமா ? கட்சிகளா ?

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு: முந்துவது யார்?மின்னம்பலம்: கர்நாடகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ளது. ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் அதிக அளவு வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டது ஆகிய காரணங்களால் இரு தொகுதிகளிலும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ராஜராஜேஸ்வரி
தொகுதியில் மே 28ஆம் தேதியன்று தேர்தல் நடத்தப்படும் என்றும், மே 31ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏனைய 222 தொகுதிகளிலும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதுவரை இல்லாத அளவு இந்தத் தேர்தலில் அதிகளவு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.94 கோடி பணம், ரூ.24.78 கோடி மதிப்பிலான மதுபானங்கள் மற்றும் ரூ.66 கோடி மதிப்பிலான பரிசுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

2013ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 71.4 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் இந்தத் தேர்தலில் 70 சதவிகிதத்துக்கு மேலாக வாக்குகள் பதிவாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஹெப்பல் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட இரண்டாம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவுக்குப் பின்னர் கிடைக்கும் ஒப்புகைச் சீட்டில் வாக்களித்த வேட்பாளருக்குப் பதில் வேறு பெயர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
இங்கு மே 14ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மே 15ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று இரவு முதல் வெளியாகி வருகின்றன.
முக்கிய ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் பின்வருமாறு:

பாஜக ஆட்சி அமைக்கும் என்று நான்கு கருத்துக்கணிப்புகளிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று நான்கு கருத்துக்கணிப்புகளிலும் கூறப்பட்டுள்ளன. இதேபோல், சில ஊடகங்கள் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையலாம் என யூகித்துள்ளன.
முன்னாள் பிரதமர் தேவேகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 30 முதல் 40 இடங்களில் வெற்றி பெறலாம் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதால் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்தை இழக்கும் வேளையில் காங்கிரஸ் அல்லது பாஜக இந்தக் கட்சியின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சிக்கும் முயற்சிக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தொங்கு சட்டப்பேரவை ஏற்படலாம் என்பதைக் கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுத்துள்ளார். என்டிடிவிக்கு அவர் அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடியின் பேச்சு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஊடகங்கள்தான் கூறுகின்றன. மக்களிடம் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை. மஜகவின் ஆதரவைப் பெறும் நிலை ஏற்படாது” என்று தெரிவித்துள்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக