ஞாயிறு, 13 மே, 2018

கொள்ளை அடிக்கும் சேலம் ஆட்சியர் ரோகினி ... காமிராவும் கையுமாக விளம்பர ராணி திக்விஜயம் ..


சேலம் மாவட்ட ஆட்சியராக இருக்கும் ரோகினி மேடம் அசைந்தாலே ஊடக வெளிச்சம் கண் கட்டுகிறது. அது என்ன மாயமோ தெரியவில்லை. ஆக்டிவ்வாக இருப்பதில் தவறில்லை. ஆக்டராக இருந்துவிடக் கூடாதே என்பதுதான் முக்கியம்.
ஏன்? நல்லதானே போய்ட்டு இருக்கு. நல்ல வேலைக்காரர் தானே, அதில் என்ன சிக்கல் என்று கேட்பவர்களுக்காக மட்டும்.
இவர் மதுரை மாவட்டத்தில் உதவி கலெட்டராக இருந்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எல்லாம் இவரது கட்டுப்பாட்டில். கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்டங்களை பார்ப்பதெல்லாம் இவர் வேலை.
நம் பிரதமர் மோடி அறிவித்தார் அல்லவா, ’தூய்மை இந்தியா திட்டம்’- அதாவது,’சுவச்சு பாரத் திட்டம்’. அது நேரடியா மாவட்ட ஊரக வளர்ச்சிகிட்ட தான் வந்து சேருது.
கழிவறை வசதி இல்லாத தனி வீடுகளே இருக்கக்கூடாது என்பதுதான் நோக்கம்.மதுரை மாவட்ட ஒன்பது யூனியன்களில் வேலை தீவிரமாக
நடந்தது. நல்லவிதமாக செயல்படும் சில தன்னார்வ தொண்டு நிறுவனமும் இதில் இறங்கியது. அவர்களில் சிறந்த முறையில் செயல்பட்ட ஓரிருவரை அப்போதிருந்த கலெக்டர் அழைத்து பாராட்டி, சான்று அளித்தார். அதை இந்த மேடம் தனக்கு சாதகமா அப்படியே பிரதமர் அலுவலகத்திற்கு பார்சல் செய்து விட்டது.

பிறகு, மதுரை மாவட்டத்தில் இருந்த எல்லா பஞ்சாயத்து தலைவர்களையும் அழைத்து ‘என்ன செய்வீர்களோ தெரியாது. உங்கள் பஞ்சாயத்தில் உள்ள எல்லா கிராமத்திலேயும் தனி கழிவறை கட்டும் திட்டம் முடிச்சுடுச்சுன்னு லெட்டர் கொடுக்கனும்‘ என்று ‘அன்பாக’ பேசினார். ‘அதெப்படி கொடுக்க முடியும்னு கேட்டீர்கள் என்றால், ‘உங்களுக்கு செக் புக்கில் கையெழுத்து போடும் அதிகாரத்தை பறித்துவிட வேண்டியதுதான்’ என்று மேலும் ‘அன்பாக’ பேசியிருக்கிறார்.
நம் பஞ்சாயத்து தலைவர்களுக்கு, ‘இருக்கின்ற சலுகைகளும் பறிபோனால் என்னாவது’ என்ற பயம். வேறு வழியின்றி அப்படியே செய்தார்கள்.
ஆனால் உண்மை வேறாக இருந்தது. பல இடங்களில் அண்ணன் தம்பி பங்காளி பிரச்சனை என்று அவர்களுக்கான இடத்தேர்வு பிரச்சனை இருந்தது. மேலும் பலருக்கு வேறு வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது. அடுத்து கட்டி முடித்த கழிவறைகளுக்கு பணம் செட்டில் செய்வதில் தாமதம் என்ற காரணமும் இருந்தது.
ஆனாலும் என்ன? ‘திட்டம் முழுதுமாக நிறைவேறி விட்டது’ என்று கடிதம் மட்டும் ரோகினி மேடம் கைக்கு போய் சேர அது எல்லாமும் பிரதமர் அலுவலகத்திற்கு போனது.
“பகுத் அச்சா, பகுத் அச்சா. அப்னா ப்ளான் எக்தம் பராபர்” என்று குதித்த பிரதமர், சுவிச்ச பாரத் திட்டத்தை இந்தியாவிலேயே, தமிழகத்திலேயே முதன்மையாக, முழுதுமாக நிறைவேற்றி முடித்தவர் என்று அழைத்து பாராட்டி முடித்தார்.
பிறகென்ன. நேரடியாக சேலம் மாவட்ட கலெக்டராக போய் சேர்ந்தார். இவருடன் வந்தவர்கள் எல்லாம் இன்னும் டெபுடி கலெக்டராகவே இருக்கிறார்கள். இருக்கட்டும்.
பிறகு என்ன நடந்தது என்றால், ரோகினி மேடம் இருந்த இடத்திற்கு வேறு ஒரு அதிகாரி வருகிறார். அவரிடம் பல பஞ்சாயத்து- கிராமங்களில் இருந்து, ‘ஐயா சாமி, எங்களுக்கு பாத்ரூம் கட்டிக்கொடுங்கோ’னு பெட்டிஷன் குவியத் தொடங்கியது.
என்னடா கொடுமையிது என்று தலையில் அடித்துக்கொள்கிறார். ‘உங்களுக்கெல்லாம் கட்டி கொடுத்தாகி விட்டது என்று உங்க பஞ்சாயத்து தலைவர் லெட்டரே கொடுத்துட்ட பிறகு எப்படி திரும்ப கட்டிகொடுக்க முடியும்? என்று கதறுகிறார். ஜனங்க பஞ்சாயத்து தலைவர்களை போய் மொத்தியது. பிரச்சனை அப்படியே நகர்கிறது.
இங்கதான் நம்ப ஆக்டிவ் கவர்னர் ப்ரோகித் வர்றார். நாட்டில் பாத் ரூம் எல்லாம் நல்லாயிருக்கா என்று தேடி சென்று பார்வையிட்டார் இல்லையா? அப்போது இந்த கழிவறை இல்லாத சனங்க எல்லாம் சேர்ந்து அவரிடம் ‘இப்படியாகிபோச்சு’ என்று மனுக் கொடுக்கிறார்கள். அவர் கலெக்டரிடம் அதை கையளிக்கிறார்.
அப்படி இப்படி என நகர்ந்து இப்போது அந்த ‘பாக்கி நபர்களுக்கான’ கழிவறை கட்டும் திட்டம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. கச்சைக்கட்டி, ஊமைச்சிகுளம், மேல்மாத்தூர், கீழ் மாத்தூர் என 100 கிராமங்களுக்கு மேல் இந்த வேலை நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வாங்கிய டாக்மெண்ட் எல்லாம், ‘மதுரை மாவட்டத்தில் இந்த தூய்மை இந்தியா திட்டம் முழதுமாக நிறைவேறிவிட்டது. அனைவருக்குமான கழிவறைகள் கட்டிக் முடிக்கப்பட்டு விட்டது’ என்றே சொல்கிறது.
அதெப்படி. ‘எல்லாம் சிறப்பாக முடிந்த மாவட்டம்’ என்றுகூறி பிரதமர் அழைத்து பாராட்டி விருது பெற்ற பிறகு, இப்போது மீண்டும் அங்கே கழிவறைகளை கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று யாரும் கேட்கக்கூடாது.
அப்போ இந்த ரோகினி மேடம் தவறாக ஆவனங்களைக் காட்டி பிரதமரிடம் விருது பெற்றவரா என்றும் கேட்கப்படாது.
இப்போது பாருங்கள், நம் முதல்வர்கூட ‘சிறந்த மாவட்ட ஆட்சியர்’ என்று அழைத்து பாராட்டுகிறார். நல்ல விஷயம் தானே.
நமக்கெதற்கு பெரிய இடத்து பொல்லாப்பு.
- பா. ஏகலைவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக