ஞாயிறு, 13 மே, 2018

பெட்னா தமிழர்கள் என்னும் அமெரிக்க எச்சை தமிழர்கள்..

கிளிமூக்கு அரக்கன் :ஆடலும் பாடலும் அமெரிக்கத் தமிழர்களும் அனிதாவின்
கொலைகாரர்களும் :-
நம்மில் பெரும்பாலான தமிழர்கள் திரைகடல் ஓடி திரவியம் தேட எங்கு சென்றாலும் உடன் எடுத்துச் செல்ல சாதியையும் தமிழுக்காக என்ற பெயரில் ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சிகளையும் மறப்பதே இல்லை. சங்கம் வைத்து தமிழ் ... நோ நோ .. தமிழ் சினிமா தமிழ் சாதி வளர்ப்பதில் தமிழர்களை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அப்படி தமிழ் சினிமா, ஆடலும் பாடலும், ஆண்ட சாதி, பார்ப்பனியம் போன்றவற்றை வளர்க்கும் பல சங்கங்கள் அமெரிக்காவில் இருக்கின்றன. அதன் கூட்டமைப்பு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை. இதன் பெயர் பெட்னா.
இந்த அமெரிக்க சங்கங்களில் பலர் புளித்தமிழர்கள் - அதாவது சிலோனில் புலிகள் தங்களது வரலாற்று தவறுகளால் தோற்றுப் போனதற்கு ஏப்பை சாக்காக கலைஞரும் நாமும்தான் காரணம் என்று அன்றாடம் அரை பாட்டில் வைனுடன் பொழுது விடிந்து பொழுது போனால் புளித்துப் போன புலம்பல்களை விஷமாய் கொட்டித் தீர்ப்பவர்கள்.
கருணாநிதிக்கு கருமாதி வராதா? என்று தமிழ்நாட்டில் எழுதும் சமூக விரோதிகளுக்கு எலும்புத் துண்டுகளை போடுபவர்கள். தாமரையுடன் இலை மலர்ந்து மக்களின் நாச காலம் ஆரம்ப மான பொழுது, பத்ரி சேஷாத்ரி அய்யங்கார் பாபர் மசூதி இடிக்கப்படட பொழுது மகிழ்ந்ததை போல மகிழ்ந்தவர்கள்.

பெட்னா என்றால் கிட்ணா வா என்று கேட்கப்போகும் உங்களில் பலருக்காக மேற்கண்ட நீண்ட நெடிய முன்னுரை. அமெரிக்காவில் ஆடலும் பாடலும் நடத்தட்டும் ரீட்டா ரெக்கார்டு டான்ஸ் என்ன எழவையாவது நடத்தித் தொலையட்டும், நமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் தமிழ் நாட்டில் மிகசிறந்த ஆட்சி நடக்கிறது என்று உலகிற்கு பொய்யாக காட்டும் வகையில், வக்கற்ற பினாமி ஆட்சியை பெருமைப் படுத்தும் ஓர் அம்சமாக நீட் தேர்வில் சமூக நீதித்தமிழர்களை நம்ப வைத்து கழுத்தறுத்த அதிமுக ஆர்.எஸ்.எஸ் வேக்கப் செல்லும் தமிழக அடிமை அமைசர்களில் ஒருவருமான பாண்டியராஜனை அமெரிக்காவிற்கு அழைத்திருக்கிறார்கள். ஆம், எர்ணாகுளம் என்ன அமெரிக்காவிலா இருக்கிறது என்று கேட்ட அதே அற்புத ஆர்.எஸ். எஸ் தாசரே .
உள்ளூர் தமிழர்களுக்காக ஒன்றையும் நகர்த்தாத ஆர்.எஸ்.எஸ் பினாமி தமிழ் நாட்டு அரசு உலகத்தமிழர்களுக்காக கிழித்து விட்டது என புரிந்துணர்வு ஒப்பந்தம் போட போகிறார்களாம். மாபியா பாண்டியராஜன் கையெழுத்திடப் போகிறாராம். பெரும் விழா எடுக்கப்பட்டு பெருமைப் படுத்தப் போகிறார்களாம். நாம் அதை வரவேற்க வேண்டுமாம். இதைவிட வெட்கம் அவமானம் அமெரிக்கத் தமிழர்களுக்கு இருந்துவிடப்போகிறது.
லண்டன் ஈஸ்ட் ஹாம், பாரிஸ் லா சாப்பல் சங்கா தமிழர்கள் ஒருவகை என்றால் , அமெரிக்க தமிழர்கள் மற்றோரு வகை. இருவருக்கும் ஒரே நோக்கம் - தமிழ்நாடு உருப்படக் கூடாது. Disaster Tourism மனோபாவம் கொண்டவர்கள். சிலோன் தமிழர் சீமான் , திருமுருகன் போன்றவர்களுக்கு நம் முகத்தில் கரி பூச கறி துண்டுகளை வீசினால், அமெரிக்க தமிழர்கள் ஒருபடி மேலே போய் சில்வண்டி இயக்கங்களின் எசமானர்களான ஆர்.எஸ்.ஸுக்கே சாமரம் வீசுபவர்கள். தம் வீட்டு பிள்ளைகள் அமெரிக்காவின் சமூக நீதி திட்டங்களினால் பயனடைந்து மேல் உயரும் பொழுது படம் எடுத்து பெருமையாக போட்டுக்கொள்ளும் அமெரிக்க தமிழர்கள், நம் வீட்டு அனிதாக்களின் சமூக நீதி கல்விக்கான ஏணி நொறுக்கப்படும் பொழுது நீலிக் கண்ணீர் வடித்து விட்டு, அதற்கு காரணமான பாண்டியராஜன்களை அமெரிக்காவிற்கு அழைத்து எப்படித்தான் பெருமை சேர்க்க முடிகிறதோ !!
சொல்வதை சொல்லிவிட்டேன் !! கடுமையான கண்டனங்களை அமெரிக்க தமிழர்களிடமும் பெட்னா என்ற ரெக்ரியேஷன் கிளப் பிடமும் சொல்லிவிடுவோம்.
"ஸ்டாம்ப் சித்தரையோ, உங்களையே, உங்கள் ஓனரையோ, உமா மகேசுவரணையோ அமெரிக்காவிற்கு அழைக்கவில்லை என்ற கடுப்பில் இப்படி எழுதி இருக்கிறார்களா ? " என நீங்கள் கேட்டால் அதற்கு என் பதில்
"பாண்டிய ராஜன் போன்ற சமூக நீதி விரோதிகளை அழைத்து பஜனைப்பாடும் ஆட்கள் எங்களை என்றும் பெட்னா போன்ற ஆடலும் பாடலும் கலை நிகழ்சசிகளுக்கு அழைத்து விடக்கூடாது என்பதற்காகவும் எழுதி இருக்கிறேன். மேலும் நாங்கள் அவார்டு வாங்கும் நிலையை கடந்து அவார்டு கொடுக்கும் நிலையையும் கடந்து அவார்டு கொடுப்பவர்களை அவார்டு வாங்குபவர்களை உருவாக்கும் அசூர வளர்ச்சியில் இருக்கிறோம். ஒன்று நிசசயம் கிளிமூக்கு அரக்கன் விருதுகள் கண்டிப்பாக சமூக நீதி விரோதிகளுக்கு தரப்பட மாட்டாது"
P.S 1 : அமெரிக்க தமிழர்களின் பெருமைகளை தமிழ் நாட்டுத் தமிழர் அறியும் வண்ணம் பல தளங்களில் இந்தத் தகவல் வெகுவாக பரப்பப் படும்.
P.S 2: பாண்டியராஜன் முகத்திற்கு நேராக அமெரிக்காவில் கருப்புக் கோடி காட்ட திட்டமிட்டிருக்கும் என்னை போன்ற அமெரிக்க வாழ் அரக்கர்களுக்கு வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக