புதன், 11 ஏப்ரல், 2018

பாத்திமா பாபு மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு.... கைது

Malathi Maithri : ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி பாத்திமா பாபு மீது ஜாமினில்
வெளிவர முடியாதா பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது காவல் துறை.
 IPC 505(1), 109, 153(A) , 124(a) and 153(B) சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்த தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். போராட்டத்தை ஒடுக்க போராளிகளை கைது செய்யும் நாடகம் இனியும் மக்களிடம் எடுபடாது. ஓட்டு போட்ட தமிழக மக்களை கைவிட்டு முதலாளிக்கு கால்பிடிக்கும் எடப்பாடி அரசே பதவி விலகு.
 tamilarasiyal :தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்ட நாளில் இருந்து மக்கள் போராடி வருகிறார்கள். இடிந்தகரையில் நடந்த அணு உலை எதிர்ப்பு போராட்டம் அவநம்பிக்கையோடு முடிவுக்கு வந்து. பல நூறு மக்கள் மீது வழக்குகளும் பாய்ந்தது.

 அவர்கள் கோர்ட்டுக்கும் கேஸுக்கும் அலைந்து கொண்டிருக்கும் அதிருப்தி தூத்துக்குடி வரை பரவி இருந்தது. ஸ்டெர்லைன் என்ற உயிர்கொல்லி எமனுக்கு எதிராக இப்படி பெருந்திரள் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதை தூத்துக்குடி மக்களே எதிர்பார்க்கவில்லை.ஆனால் கடந்த பல நாட்களாக அனைத்து மக்களும் திரண்டு சாதி, மத உணர்வுகளை வென்று ஸ்டெர்லைட்டை மூடு என்ற ஒற்றைக் குரலில் திரண்டு நிற்கிறார்கள். இந்த போராட்டங்களை முன்னின்று ஒருங்கிணைத்து வருகிறார் பேராசிரியர் பாத்திமா பாபு.
யாரும் எதிர்பாராத வண்ணம் வணிகர்களும், விவசாயிகளும் , மீனவர்களும் இணைந்து நடத்தும் இந்த போரட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்றுச் செல்கிறதே ஒழிய பலவீனமடைந்து விட வில்லை. காரணம் ஸ்டெர்லைட் எனும் எமன் அணு அணுவாய் கொல்வதை அன்றாடம் தூத்துக்குடி மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
போராட்டம் வலுப்பெற்ற நிலையில், ஸ்டெர்லைட் நிர்வாகம் பராமரிப்பு பணி என்று சொல்லி 15 நாள் ஆலை இயங்குவதை தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறது. ஆனால் ஆலை மூடப்பட்டுள்ள இந்த 15 நாட்களுக்குள் எப்படியாவது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தீவிரமாக வேலை செய்ய துவங்கி விட்டது. எப்படியாவது பேராசிரியர் பாத்திமாபாவுவை கைது செய்யச் சொல்லி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. வேதானந்தா குழுமத்திடம் தேர்தல் நிதி பெறும் அனைத்து அரசியல் கட்சிகளுமே ஸ்டெர்லைட் ஆலை பற்றி மவுனம் காக்கும் நிலையில், வேதானந்தா குழுமத்தின் அழுத்தங்களுக்கு பணிந்துள்ள தமிழக அரசு பேராசிரியர் பாத்திமா பாபு மீது IPC 505(1), 109, 153(A) , 124(a) and 153(B) சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகளில் கைது செய்ய பின்னர் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கவும் போராடிய மக்களுக்குள் சாதி, மத பிளவுகளை உருவாக்கி தூத்துக்குடியில் ஒரு பதட்டச் சூழலை உருவாக்கி ஸ்டெர்லைட்டின் இருப்பை உறுதி செய்யும் சதித்திட்டங்கள் உருவாகத் துவங்கி விட்டன. அதன் முதல் முயற்சியால் பேராசியர் பாத்திமா பாபு மீது வழக்குகள் போடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக