புதன், 11 ஏப்ரல், 2018

கர்நாடகாவில் தமிழகத்துக்கு எதிராக பாஜக செய்யும் விஷம் தோய்ந்த பிரசாரம்


Terance JP : பிஜேபி இவ்வளவு கொடூரமான செயல்பட்டாலும், காங்கிரஸை
காட்டிலும் படுமோசமான ஆட்சியை பிஜேபி கொடுத்தாலும் ஏப்படி பிஜேபி செல்வாக்கோடு இந்தியாவில் இருக்கிறது?
அவர்களின் நயவஞ்சக​ தந்திரம் அப்படிப்பட்டது.
ஒர் உதாரணம் சொல்கிறேன். தற்போது காவேரி உரிமைக்காக​ தமிழத்தில் நடைபெறும் போராட்டங்களை காட்டி கன்னட​ மக்களிடையே வெறியை ஒருபோதும் காங்கிரஸ் தூண்டாது.
மக்களிடையே வெறியை தூண்டி கர்நாடகா தேர்தல் வெற்றியை பெற ராகுல்காந்தியோ சித்தராமைய்யாவோ ஒருபோதும் முயலமாட்டார்கள்.
ஆனால், காவேரி உரிமைக்காக​ தமிழத்தில் நடைபெறும் போராட்டங்களை காட்டி கன்னட​ மக்களிடையே வெறியை பிஜேபி தூண்டி வருகிறது
கர்நாடகாவில் பிஜேபி செய்யும் பிரச்சார​ உக்திகள் சில​ உங்கள் பார்வைக்கு
1) தமிழக காங்கிரஸார் தமிழகத்தில் செய்த​ காவேரி போராட்டங்களை காட்டி மீமீஸ் போட்டு காங்கிரஸை கன்னடர்களின் விரோதியாக​ சித்தரித்து கன்னட​ மக்களிடையே வெறியை தூண்டி விடுகிறது
2)காவேரி போராட்டத்தில் இருந்த​ மூஸ்லீம் லீக் கட்சி கொடியை பாகிஸ்தான் கொடி போல் காட்டியும் , காவேரி போராட்டத்தில் பங்கு பெற்ற​ மூஸ்லீம் மக்களை காட்டியும் மீமீஸ் போட்டு கர்நாடக​ இந்து மக்களின் வெறியை பிஜேபி தூண்டி விடுகிறது.

இது போன்ற​ பல​ விஷம உக்திகளை நயவஞ்சகமாக​ பிஜேபி செய்வதால் தான் பிஜேபியால் வெற்றிகளை பெற்று செல்வாக்கோடு திகழ்கிறது.
காங்கிரஸூம் பிஜேபியும் ஓன்று தான் என்று செய்யப்படும் விமர்சனம் உண்மையல்ல​! காங்கிரஸை விட​ பல​ மடங்கு மோசமான விஷம​ கட்சி பிஜேபி என்பது தான் உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக