திங்கள், 23 ஏப்ரல், 2018

தலித் இளைஞர் அடித்து இருசக்கர வாகனத்தில் இழுத்து கொலை ... திருவண்ணாமலை ... பாமகவினர் ? போலீஸ் ?

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தாலுக்கா அனக்காவூர் ஒன்றியம்
தென்தன்டலம் கிராமத்தை சேர்ந்த சாமிகண்ணுமகன் சதசிவம் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர் செய்யார் விஸ்டன் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார் ஓய்வு நேரங்களில் சமையல் வேலைக்கு செல்பவர்
நேற்று 21.4.2018 சமயல் வேலைக்கு செல்லும் போது சுமங்களியை தாண்டும் போது கூட்டமாக போலிசும் வேறு காரணத்திற்க்காக நின்று இருந்துள்ளார்கள் போலிசை பார்த்த மூவரும் திரும்பியிருக்கிறார்கள் அப்போது வன்னிய இளைஞர்கள் அடிக்க முயற்ச்சிக்க பயந்து ஒட விரட்டி பிடித்தவுடன் விசிக அடையாளத்தோடு இருக்க வெளி காயம் இல்லாமல் அடித்து கொலை செய்யுங்கள் என்று கத்திகூவி அடித்து இருசக்கர வாகணத்தில் இழுத்து சென்றுள்ளார்கள் போகும் வழியில் இறந்துவிடவே கீழே தள்ளிவிட்டு ஓடி விட்டார்கள்

இந்த நிலையில் செய்யார் காவல் நிலையத்தில் நமது கட்சி மாவட்டச் செயலாளர். பகலவன் தொகுதி செயலாளர் குப்பன் உள்ளிட்ட தோழர்கள் களத்தில் உள்ளார்கள்
மக்கள் மன்றம் தோழர்களோடு காஞ்சி மருத்துவமனையில் இறந்த சதாசிவம் உடலை மருத்துவ மணையில் சென்று பார்த்தோம் நாளை காலை23.4.2018 காஞ்சி மருத்துவமணை முன்பு கூடுவோம்
சாதி வெறி மிருகங்களை கண்டித்து ஒன்று கூடுவோம்.  முகநூல்தகவல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக