திங்கள், 23 ஏப்ரல், 2018

ஓடும் ரெயிலில் தமிழக வழக்கறிஞர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தாக்குதல் ... கைது 2006 ஆர் கே நகரின் பாஜக வேட்பாளர்

Shankar A : திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வரும் ரயிலில், 10 வயதுக்கு
குறைவான பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக பிரமுகர் கைது.
2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ஆர்கே நகர் தொகுதி பிஜேபி வேட்பாளராக போட்டியிட்டவர் பிரேம் ஆனந்த். இவர் ரயிலில் பயணம் செய்கையில், பெற்றோரோடு பயணித்த, 10 வயதுக்கு குறைவான குழந்தையை பாலியல் ரீதியாக இரவு நேரத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
அந்தக் குழந்தை கத்தி பெற்றோரை எழுப்பியதும், உடனடியாக ரயில் ஈரோடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. பிரேம் ஆனந்த், தான் வழக்கறிஞர் என்றும், பிஜேபியில் பெரிய தலைவர் என்றும், ஆர்எஸ்எஸ்ஸில் பெரிய தலைவர்களைத் தெரியும் என்றும் பெற்றோரை மிரட்டியுள்ளார்.

ஆனால் காவல்துறையினர் உடனடியாக அவரை பாஸ்கோ சட்டத்தில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
குறிப்பு - சந்தானத்திடம் அடி வாங்கியது வேறு பிரேம் ஆனந்த். பதிவு திருத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக