திங்கள், 23 ஏப்ரல், 2018

பதாமியில் ஒத்தையா நிக்கேன்.. தைரியம் இருந்தா மொத்தமா வாங்க ...கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

: Sutha - Oneindia Tamil   பெங்களூரு: பதாமி தொகுதியில் யார் போட்டியிட்டாலும் எனக்குக் கவலை இல்லை. யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். 
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் சார்பில் சாமுண்டேஸ்வரி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடவுள்ளார். இந்த நிலையில் தற்போது பதாமி தொகுதியிலும் அவர் போட்டியிடவுள்ளார். இதனால் பெரும் எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. பதாமி வெற்றி வாய்ப்பு குறித்து சித்தராமையாவிடமே கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்துள்ளார். கொள்கைகள்தான் முக்கியம் கொள்கைகள்தான் முக்கியம் சித்தராமையா கூறுகையில், இங்கு கொள்கைகள்தான் முக்கியம். ஆட்கள் அல்ல. எனவே பதாமியில் யார் போட்டியிட்டாலும் எனக்குக் கவலை இல்லை. 
 யார் போட்டியிட்டாலும் கவலை இல்லை பதாமி தொகுதியில் பாஜக சார்பில் ஸ்ரீராமுலு போட்டியிட்டாலும் சரி, அல்லது வேறு யார் நிறுத்தப்பட்டாலும் சரி. எனக்குக் கவலை இல்லை. பாகல்கோட், விஜயபுரா மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள்தான் என்னை இங்கு போட்டியிடுமாறு வற்புறுத்தினர்.
இது இப்பிராந்தியத்தில் காங்கிரஸுக்கு வலு சேர்க்கும் என்பது அவர்களது கருத்து. மதவாதத்தை வீழ்த்துவோம் மதவாதத்தை வீழ்த்துவோம் நாங்கள் மதவாதம், ஜாதிய வாதத்தை எதிர்த்துப் போட்டியிடுகிறோம். மோதுகிறோம். மதவாத சக்திகளை வீழ்த்தி வெற்றி பெறுவோம். அதைத் தோற்கடிக்கவே விரும்புகிறோம்.

வெற்றி பெறுவேன் என நம்புகிறேன் சாமுண்டேஸ்வரி தொகுதி மக்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள். ஏற்கனவே எனக்கு ஆதரவாக வாக்களிக்க அவர்கள் முடிவு செய்து விட்டனர் என்று கூறியுள்ளார் சித்தராமையா.
எதியூரப்பா இதற்கிடையே, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உத்தரவிட்டால், பதாமி தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட தான் தயார் என்று முன்னாள் முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார். நான் போட்டியிடத் தயார். அல்லது வேறு யாரையேனும் போட்டியிட கட்சித் தலைவர் உத்தரவிட்டால் அவர்கள் போட்டியிடுவார்கள் என்று கூறினார் எதியூரப்பா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக