செவ்வாய், 17 ஏப்ரல், 2018

தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தி மக்களை வேவு பார்க்க பாஜக / நாசிகள் ஆலோசனை !

தினத்தந்தி :தொலைக்காட்சி பெட்டியின் செட் ஆப் பாக்ஸ் கருவியில் ”சிப்” பொருத்தும்
திட்டத்தை முன்வைத்துள்ள மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. புதுடெல்லி, தொலைக்காட்சி பெட்டியின் செட்-டாப் பாக்ஸ் கருவியில் சிப் பொருத்துவது தொடர்பான திட்டத்தை, நாட்டு மக்களை வேவு பார்க்கும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. தொலைக்காட்சியில் மக்கள் எந்த நிகழ்ச்சியை அதிக நேரம் காண்கிறார்கள் என்பதை அறிவதற்காக, புதிய தொலைக்காட்சியின் செட்- டாப் பாக்ஸ் கருவியில் பொருத்துவது தொடர்பான திட்டத்தை மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் முன்வைத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு தொலைக்காட்சியையும் எவ்வளவு பேர் காண்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டமானது,

விளம்பரதாரர்கள், விளம்பர இயக்குநரகம் ஆகியவைகளுக்கு, எந்தத் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யலாம் என்பது தொடர்பான முடிவை எடுக்க உதவியாக இருக்கும் என்றார்.

இந்நிலையில், மத்திய அரசு முன்வைத்துள்ள இந்தத் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக டுவிட்டரில் அக்கட்சியின்  செய்தி தொடர்பாளர்  த ரன்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டு மக்களை வேவு பார்க்கும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை வெட்டவெளிச்சமாகியுள்ளது. 

தனிநபர் ரகசியத்தில் தலையிடும் நடவடிக்கையாக, 4 சுவர்களைக் கொண்ட படுக்கை அறைகளில், தொலைக்காட்சி பெட்டிகளில் எந்த நிகழ்ச்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விரும்புகிறார். மத்தியில் ஆளும் மோடி அரசானது, வேவு பார்க்கும் அரசாகும். மத்திய அரசானது, தனிநபர் ரகசியம் தொடர்பான உரிமையை நசுக்கி விட்டது”  இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக