செவ்வாய், 17 ஏப்ரல், 2018

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் தீக்குளிக்க முயற்சி... கடலூரில் ..

tamilthehindu :கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் தீக்குளிக்க முயன்றனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தனது குடும்பத்தினர் 18 பேருடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் அருகே நொச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன், விவசாயி. இவரது வீட்டுக்கு செல்லும் அரசு புறம்போக்கு இடத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த செங்கல்வராவ் என்பவர் ஆக்கிரமித்துள்ளார். இதனால் தங்கபாண்டியன் தனது வீட்டுக்கு செல்ல வழியில்லாமல் அவதிப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பலமுறை வருவாய் துறைக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த அவர், நேற்று தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பெண்கள், 4 ஆண்கள், 8 குழந்தைகள் என 18 பேர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்துக்குச் சென்றனர். ஆட்சியர் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் தங்கபாண்டியன் குடும்பத்தினர் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.
உடனே அங்கிருந்தவர்கள் தடுத்து அவர்களை மீட்டனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக