ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

போராட்டக் களமாக மாறி வரும் தமிழகம்.....!


ஸ்டெர்லைட்டை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் போராட்டம்.......
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைவதை எதிர்த்து தொண்டர்களுடன் மதுரையிலிருந்து கம்பம் நோக்கி வைகோ நடைபயணம்.......
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தஞ்சை டெல்டா விவசாயிகள் போராட்டம்.......
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தலைநகர் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் திருநாவுக்கரசர், கி.வீரமணி, திருமாவளவன், முத்தரசன், ஜவாஹிருல்லா, உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது........
இனி முன்னறிவிப்பில்லாத போராட்டங்கள் தமிழகம் முழுவதும் காவிரி விவகாரத்துக்காக நடைபெறும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் அறிவிப்பு.........
3 ம் தேதி காவேரி விவகாரத்துக்காக அதிமுகவினரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தகவல்........
( இவங்க ஏன் போராடுறாங்கன்னு தெரியல )
தமிழ்நாடு வணிகர் சங்கங்களும் காவேரி விவகாரத்துக்காக ஒரு நாள் கடையடைப்பு நடத்த முன் வந்திருக்கிறார்கள்.......

ஆங்காங்கே சிறு சிறு அமைப்புகளும், தன்னார்வலர்களும், கல்லூரி மாணவ மாணவிகளும் கூட காவிரி மற்றும் ஸ்டெர்லைட், நியூட்ரினோ போன்றவற்றிற்காக போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகிக் கொண்டிருக்கிறார்கள்........
போராட்டக் களமாக மாறி வரும் தமிழகம்.......
பாஜக மட்டும் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.....
வாழ்க தமிழகம், வளர்க தமிழிசை......!
#Zen_Selva

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக