வெள்ளி, 27 ஏப்ரல், 2018

89 லட்சம் ஆதார் தகவல்கள் இணையத்தில்.. அந்தரங்க விபரங்கள் அம்பலம் ...

89 லட்சம் ஆதார் தகவல்கள் இணையத்தில் வெளியீடு!மின்னம்பலம் :ஆந்திரா மாநிலத்தில் 89 லட்சம் ஆதார் கார்டு தகவல்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணைய தளத்தில் 9 லட்சம் நூறு நாள் வேலைத்திட்டத்தின் பயனாளிகள் குறித்த தகவல்கள் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளன. அவர்களுடைய வங்கிக் கணக்கு எண், ரேஷன் கார்டு எண், சாதி மற்றும் பிற தகவல்கள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன.
ஆதார் தகவல் கசிவு குறித்து இணைய தள பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் கோடாலி சீனிவாசன் தனது மின்னஞ்சலில் அம்பலப்படுத்தியவுடன் உடனே எண்கள் மட்டும் மறைக்கப்பட்டன

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தின்கீழ் 1.02 கோடி பயனாளிகள் உள்ளதாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தற்போது 89,38,138 பயனாளிகளின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஆதார் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று உறுதி அளித்தது. ஆனால், ஒவ்வொரு நாளும் ஆதார் தகவல்களின் கசிவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக