ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

திமுக ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட 36 அணைகள் விபர பட்டியல்

தமிழகத்தில் உள்ள மொத்த 115 அணைகளில் சுதந்திரத்திற்கு பின் கட்டப்பட்வை 90 அணைகள். சுதந்திரத்திற்கு பின் 5 ஆண்டு திட்டங்களில் டேம் கட்டத்தான் முன்னுரிமை வழங்கப்பட்டது. 
எனவேதான் காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் 19 ஆண்டுகளில் 25 பெரிய அணைகள் கட்டப்பட்டது. 
1967 இல் ஆட்சிக்கு திமுக வந்தபோது 5 ஆண்டு திட்டங்கள் நிறுத்தப்பட்டு ஓர் ஆண்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் கலைஞரின் விடாமுயற்சியால் கீழ்க்கண்ட அணைகள் அவர் ஆட்சி செய்த 21 வருடங்களில் 36 அணைகள் துவங்கப்பட்டு கொண்டுவரப்பட்டது.
Don Ashok - Ashok.R : காமராசர் காலத்துக்கு அப்புறம் தமிழ்நாட்ல அணையே கட்டவில்லை என தற்குறி முண்டங்கள் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விட்டால் காமராஜர் காலத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் யாரும் கக்கூசே போகவில்லை எனக்கூட சொல்வார்கள். அதையும் ஒரு வாட்சப்புக்கு பொறந்த பைத்தியக்கார கும்பல், "அதிகம் பகிரவும்," என பரப்பிக் கொண்டு அலையும்.
திமுக ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட அணைகள் தான் இவைகள் :
மணிமுக்தாநதி = 20.62 மில்லியன் கன மீட்டர்
சின்னார் = 13 மில்லியன் கன மீட்டர்
ராஜதோப்புக்கிணர் = 00.58 மில்லியன் கன மீட்டர்
மோர்தானா = 07.40 மில்லியன் கன மீட்டர்
செண்பகத்தோப்பு = 08.13 மில்லியன் கன மீட்டர்
வரட்டார் = 03.12 மில்லியன் கன மீட்டர்
ஆண்டியப்பனூர்ஓடை = 03.18 மில்லியன் கன மீட்டர்
மஞ்சளார் 13.48 = மில்லியன் கன மீட்டர்
சித்தார் 1 16.99 = மில்லியன் கன மீட்டர்
சித்தார் 2 11.13 = மில்லியன் கன மீட்டர்


கட்னா 09.97 = மில்லியன் கன மீட்டர்
ராமாநதி 04.30 = மில்லியன் கன மீட்டர்
பிளவுக்கல் பெரியார் = 05.44 மில்லியன் கன மீட்டர்
பிளவுக்கல் கோயிலார் = 03.77 மில்லியன் கன மீட்டர்
கருப்பாநதி = 05.24 மில்லியன் கன மீட்டர்


அணைக்குட்டம் =06.66 மில்லியன் கன மீட்டர்
நம்பியாறு = 02.33 மில்லியன் கன மீட்டர்
பொய்கையாறு = 02.97 மில்லியன் கன மீட்டர்
பரப்பலார் = 05.60 மில்லியன் கன மீட்டர்
பெரும்பள்ளம் = 03.28 மில்லியன் கன மீட்டர்
குதிரையாறு = 07.16 மில்லியன் கன மீட்டர்
நொய்யல் ஆத்துபாலம் = 06.46 மில்லியன் கன மீட்டர்
நிரார் மேல் அணை = 01.10 மில்லியன் கன மீட்டர்
பெருவரிப்பள்ளம் = 11.02 மில்லியன் கன மீட்டர்
சோலையார் =152.50 மில்லியன் கன மீட்டர்
நங்கஞ்சியார் =07.20 மில்லியன் கன மீட்டர்
நல்லத்தங்காள் ஓடை = 06.32 மில்லியன் கன மீட்டர்
பொன்னனியாறு = 03.40 மில்லியன் கன மீட்டர்
உப்பார் (ஈரோடு) =14.92 மில்லியன் கன மீட்டர்.
மாம்பழத்துறையாறு அணை ( குமரிமாவட்டம்) = 44.54 மில்லியன் கன அடி மீட்டர்

குறிப்பு: சில ஜென்மங்கள் வந்து மிகப்பெரிய அணைகளை கட்டலையே என்பார்கள். அடேய்களா... ஜெயலலிதாவின் எஸ்டேட்டுகளைப் போல அணைகளை கண்டபடி கட்ட முடியாது. அந்தந்த நதிக்கு ஏற்றார்போல், இடத்திற்கு ஏற்றார்போல்தான் கட்டமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக