சனி, 7 ஏப்ரல், 2018

ஆடை களைந்து போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி!

srireddy1நக்கீரன் :சி.என்.ராமகிருஷ்ணன் நடிகை ஸ்ரீரெட்டிக்கு துணிச்சல் ரொம்ப அதிகம்தான்! தெலுங்குத் திரையுலகத்தை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார் போல! திரைக்குப் பின்னால், சினிமாக்காரர்களுக்கு ஒரு இருட்டு உலகம் இருப்பது அறிந்த ஒன்றுதான்! ஆனாலும், அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு யாரும் முன்வருவதில்லை. ஏனென்றால், கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல் எறிவது போன்ற செயலில் யாரும் இறங்க மாட்டார்கள். விதிவிலக்காக, ஏதோ ஒரு பேட்டியில், யாராவது ஒரு சினிமா பிரபலம், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்தெல்லாம் பேசிவிடுவார். அல்லது, வலைத்தளங்களில் நடிகர், நடிகைகளின்  ஆபாச படங்களை,  சினிமா சம்பந்தப்பட்டவர்களே,  வேண்டுமென்று லீக் செய்துவிடுவர். இவையெல்லாம் அவ்வப்போது பரபரப்பு செய்தியாகி, பின்னர் அடங்கிவிடும். அந்த வகையில், இப்போது  சர்ச்சையைக் கிளப்பி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலக உள் விவகாரங்களை அம்பலப்படுத்துவேன் என்பதில் தீவிரம் காட்டுகிறார்.
இதன் உச்சக்கட்டமாக, ஹைதராபாத்தில் உள்ள மூவி ஆர்டிஸ்ட் அசோசியேசன் எதிரில், அருவருப்பாக நடந்து பரபரப்பு உண்டாக்கியிருக்கிறார்.

sexy ladyஒரு சில தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே நடித்திருக்கும் ஸ்ரீரெட்டி, தெலுங்கு ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மீது குற்றம் சுமத்தி, பேட்டியளித்து வருகிறார். ஜாதி பிரச்சனை, பாலியல் தொல்லை என நடிகைகள் சந்தித்து வரும் கஷ்டங்களை அம்பலப்படுத்துகிறார். ஹீரோக்கள், தயாரிப்பாளர்களுக்கு புரோக்கர்களாகச் செயல்படுகின்றனர். தெலுங்கு நடிகைகளில் 90 சதவீதம் பேர் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகிவருகின்றனர். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரின் பெயர்களை வெளியிடுவேன். மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் உறுப்பினருக்கான அடையாள அட்டையைக்கூட எனக்குத் தர மறுக்கின்றனர் என்றெல்லாம் பேசி வந்த அவர், இன்று மதியம் 1 மணியளவில்,  ஹைதராபாத்தில் உள்ள மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் அலுவலகம் வந்தார். அவர் நடந்துவரும் காட்சியை வீடியோ எடுத்தார்கள் சேனல் வீடியோகிராபர்கள். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், துப்பட்டா, மேலாடை, பேன்ட் என ஒவ்வொன்றையும் கழற்றி எரிந்தார். கிட்டத்தட்ட, அரை நிர்வாண கோலத்துக்கு மாறி, அந்த அலுவலகத்துக்கு வெளியே தரையில் உட்கார்ந்து, தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

“ஒரு பெண்ணாகிய நான் இப்படி ஒரு போராட்டத்தில் ஈடுபடுகிறேன் என்றால், அதற்கு காரணம் மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன்தான்.” என்று, தனது போராட்டத்துக்கு விளக்கம் வேறு தந்தார். பொது இடத்தில், நிர்வாணப் போராட்டம் நடத்த முயன்றதால், ஸ்ரீரெட்டியை ஜூப்ளிஹில்ஸ் போலீசார் கைது செய்தனர்.

முள்ளை முள்ளால் எடுக்கும் ‘டெக்னிக்’ இதுதானோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக