ஞாயிறு, 25 மார்ச், 2018

YSR ராஜசேகர் ரெட்டியாக மம்மூட்டி, மனைவியாக நயன்தாரா , மருமகளாக கீர்த்தி .. படமாகிறது

நயன்தாராவின் மருமகள்!மின்னம்பலம்: மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாத்தஷலா, ஆனந்தோ பிரம்மா உள்ளிட்ட படங்களை இயக்கிய மகி ராகவ் இயக்கவுள்ள திரைப்படம் ‘யாத்ரா’. இது மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. தெலுங்கு மட்டுமல்லாமல் பல மொழிகளில் தயாராகவுள்ள இந்தப் படத்தில் ஒய்.எஸ்.ஆர் வேடத்தில் மம்முட்டியும் அவரது மனைவி விஜயம்மாவாக நயன்தாராவும் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மருமகளாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தைத் தொடர்ந்து தளபதி 62, விக்ரமின் சாமி 2 மற்றும் சண்டக்கோழி 2 எனப் பல படங்களில் பிஸியாகி உள்ளார். தற்போது ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜகன்மோகன் ரெட்டியின் மனைவியான ஒய்.எஸ்.பாரதி வேடத்தில் நடிக்க இருப்பதாக டோலிவுட் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜசேகர ரெட்டி. ஆட்சியில் இருக்கும்போது விமான விபத்தில் 2009ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக