ஞாயிறு, 25 மார்ச், 2018

நாதெள்ளா நகைக்கடை 250 கோடி கடன் மோசடி .. சிபிஐ வழக்குப்பதிவு

நாதெள்ளா சம்பத் நகைக்கடை, வங்கி மோசடி, சிபிஐ, வழக்கு தினமலர் :சென்னை : ரூ.250 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்ததாக சென்னை நாதெள்ளா சம்பத் நகைக்கடை மீது எஸ்பிஐ., சார்பில் சிபிஐ.,யில் புகார் அளிக்கப்பட்டது.< வாடிக்கையாளர்கள் பலர் அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் நாதெள்ளா சம்பத் நகைக்கடை நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. நிதி ஆதாரங்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை வழங்கி எஸ்பிஐ, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று வட்டியுடன் ரூ.379 கோடி வரை நாதெள்ளா நகைக்கடை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக