செவ்வாய், 20 மார்ச், 2018

காணாமல் போன மலேசிய விமானம்: புதிய தகவல்! MH370: missing plane 'found' using Google Earth



காணாமல் போன மலேசிய விமானம்: புதிய தகவல்!மின்னம்பலம் :2014ஆம் ஆண்டு கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 239 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானம், மாயமானது குறித்து தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் நோக்கி, 239 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370, 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி புறப்பட்டுச் சென்றது. ஆனால் புறப்பட்ட 2 மணி நேரத்தில் அந்த விமானம், ரேடாரில் இருந்து மாயமானது. மாயமான விமானம் குறித்து மலேசியா மற்றும் சீனா இணைந்து கடல் பகுதியில் சோதனை நடத்தி, பின்னர் அந்த விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது என்றும் விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனர் என்றும் தெரிவித்தது. இதனையடுத்து தேடும் பணி கைவிடப்பட்டது.


இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 64 வயதாகும் இயந்திரவியல் பொறியாளரான பீட்டர் மக்மென் என்பவர் மலேசிய விமானத்தின் பாகங்களைத் தற்போது கூகுள் எர்த் மூலம் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பீட்டர் மக்மென், "விமானம் இருக்கும் இடம் மொரிஷியஷில் இருந்து 22.5 கிமீட்டர் தொலைவில் 16 கி.மீ தெற்கில் உள்ள ரவுண்ட் தீவைக் காட்டுகிறது. இந்தத் தீவில் இதுவரை விமானம் மாயமானது குறித்து தேடுதல் நடத்தப்படவில்லை. அதோடு, அமெரிக்கா அதிகாரிகள் சரியான தேடுதல் வேட்டையை நடத்தவில்லை. இந்தப் பகுதியில் தேடுதல் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது. தேடுதல் பணிக்கு அனுப்பட்ட அமெரிக்க அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. மாயமான விமானம் முற்றிலும் குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது. விமானம் புறப்பட்ட 6 மணி நேரத்திற்குப் பிறகு இந்தியப் பெருங்கடலில் விழுந்துள்ளது" என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக