செவ்வாய், 20 மார்ச், 2018

தாய் கண்ணெதிரே மகனைக் கொடூரமாகக் கொன்றவருக்குத் தூக்குத்தண்டனை! நெல்லை நீதிமன்றம்

தூக்குத் தண்டனை கைதிvikatan :பி.ஆண்டனிராஜ்lt;/ குடும்பப் பிரச்னை காரணமாக நெல்லையில் பள்ளிச் சிறுவனை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த குற்றவாளிக்குத்  தூக்குத்தண்டனை விதித்து நெல்லை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நெல்லையை அடுத்த பேட்டை பகுதியில் வசித்து வருபவர், இசக்கியப்பன். இவரது மனைவி பிரேமா. இவர்களது 5 வயது மகன் தருண் மாதவ் அருகில் உள்ள பள்ளியில் யூ.கே.ஜி படித்து வந்தார். இவர்களது வீட்டுக்கு அருகில் வசித்து வந்தவர் ஆறுமுகம். குடும்பப் பிரச்னை காரணமாக அவரது மனைவி பிரிந்து தனியாக வசித்து வந்தார். தனது மனைவி பிரிந்து சென்றதற்கு பிரேமாதான் காரணம் என ஆறுமுகம் நினைத்தார்.
அதனால், அவர்களுக்குள் தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி பிரேமா தனது மகனை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துக்கொண்டு நடந்து வந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்த ஆறுமுகம், தனது மனைவி பிரிந்து செல்ல காரணமே நீதான் என்று பிரேமாவிடம் தகராறு செய்துள்ளார்.

அத்துடன், மறைத்து வைத்திருந்த அறிவாளை எடுத்து பிரேமாவின் கண் எதிரிலேயே அவரது மகன் தருண் மாதவை கொடூரமாக வெட்டிச் சாய்த்தார். பள்ளி உடையில் இருந்த சிறுவனுக்கு 24 வெட்டு விழுந்தது. அதனைத் தடுத்த பிரேமாவுக்கும் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் சிறுவன் தருண் மாதவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். பலத்த வெட்டுக் காயத்துடன் உயிருக்குப் போராடிய பிரேமா, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைத்தார். சம்பவ நடந்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆறுமுகத்தை விரட்டிச் சென்றார்கள். வேகமாக ஓடிய ஆறுமுகம் அருகில் இருந்த மின்கம்பத்தில் முட்டி கீழே விழுந்தார். அவரைப் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.< இந்த வழக்கு நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து நீதிபதி அப்துல்காதர் நேற்று (19-ம் தேதி), ஆறுமுகத்தை குற்றவாளி என அறிவித்ததுடன், தண்டனை விவரம் மறுநாள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஆறுமுகத்தை போலீஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது, குற்றவாளி ஆறுமுகத்துக்குத் தூக்குத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட இசக்கியப்பன் குடும்பத்துக்கு ரூ.51,000,00 அபராதத்தை ஆறுமுகம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பை சிறுவன் தருண் மாதவ் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக