செவ்வாய், 20 மார்ச், 2018

கணவரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள சசிகலாவுக்கு பரோல்....

நக்கீரன் :இசக்கி கணவர் நடராஜனின் மறைவை அடுத்து சசிகலாவுக்கு பரோல் பெற மனு தாக்கல் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சசிகலாவிடம் கையெழுத்து பெற்று பரோல் மனு தாக்கல் செய்யப்படும் என அவரது வழக்கறிஞர் அசோகன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக்குறைவால் நள்ளிரவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 76. புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 16-ம் தேதி, சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்த இடங்களில் நோய் தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் பல்வேறு உறுப்புகள் செயல் இழந்து நள்ளிரவு 1 மணி 35 நிமிடத்தில் உயிரிழந்தார். பெசன்ட் நகரில் அவரது இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து காலை 11 மணியளவில் அவரது சொந்த ஊரான தஞ்சைக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக