செவ்வாய், 20 மார்ச், 2018

நடராஜன்-ஜெயலலிதா மோதல் ஏன்? பின்னணி தகவல்கள் - பகுதி 2

R Mani - Oneindia Tamil - ஆர். மணி சென்னை: ஆரம்ப காலத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டாலும், ஒரு கட்டத்திற்கு மேல், ஜெயலலிதாவுக்கும் நடராஜனுக்கும் இடையே, பிரச்சினை ஏற்பட்டது. இதன்பிறகு ஜெயலலிதா மறையும்வரை நடராஜனை தூரத்திலேயே வைத்திருந்தார். பல முறை கைது நடவடிக்கைகளும் பாய்ந்தன. நடராஜன் மனைவி சசிகலா, இறுதிவரை ஜெயலலிதாவுக்கு தோழியாக இருந்தபோதிலும், நடராஜனை மட்டும் ஜெயலலிதா ஒதுக்கி வைக்க சில காரணங்கள் இருந்தன.
 நடராஜனின் புத்திசாலித்தனமான காய் நகர்த்தல்கள் தனக்கே எதிராக திருப்பும் என்ற அச்சம் ஜெயலலிதாவுக்கு இருந்தது எனலாம். பண மோசடி செய்ததாக புகார் 1989 ல் ஜெ அணியில் இருந்த ஒரு அஇஅதிமுக தொண்டர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதாவது தனக்கு ஜெ அணியில் எம்எல்ஏ சீட் வாங்கிக் கொடுப்பதாக கூறி நடராஜன் தன்னிடம் இருந்து பணத்தை பெற்றதாகவும், ஆனால் சீட் கிடைக்கவில்லை, பணத்தையும் திரும்பத் தர நடராசன் மறுக்கிறார் என்று கூறியிருந்தார்.
 இந்த புகாரினை விசாரிக்க நடராஜனின் வீட்டுக்கு சென்ற போலீஸ் அங்கு ஜெயலலிதா தான் அரசியலில் இருந்து விலகி கொள்ளுவதாக எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றுகிறது. அந்தக் கடிதம் அடுத்த நாள், அது ஒரு ஞாயிற்றுக் கிழமை எல்லா பத்திரிகைகளிலும் வந்தது. இந்த விவகாரத்தை அப்போதய எதிர்கட்சித் தலைவராகவும் இருந்த ஜெயலலிதா மார்ச் 25, 1989 ல் சட்டமன்றத்தில் கிளப்பினார்.
அன்றுதான் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மூக்குக் கண்ணாடி உடைப்பு மூக்குக் கண்ணாடி உடைப்பு முதல்வர் கருணாநிதி நிதி இலாகவையும் அப்போது தன் வசம் வைத்திருந்ததால் அவர் பட்ஜெட்டை வாசிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் ஜெயலலிதா தன்னுடைய கடிதம் திருடப்பட்ட விவகாரத்தை கிளப்ப, பிரச்சனை வெடித்து, சட்டமன்றம் போர்களமானது. கருணாநிதியின் மூக்கு கண்ணாடி உடைந்தது, ஜெயலலிதா மீதும் தாக்குதல் நடந்தது. தலைவிரி கோலமாக ஆளுநர் மாளிகைக்கு போன ஜெயலலிதா, இனி அடுத்த முறை தமிழக சட்டமன்றத்துக்கு முதலமைச்சராகத்தான் வருவேன் என்று சபதம் எடுத்தார். 
1991 ல் அந்த சபதத்திலும் வென்று முதலமைச்சராக சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்தார். இந்த விவகாரம், நடராஜனால் திட்டமிட்டு அரங்கேற்றப் பட்ட விவகாரம் என்றே ஜெ நம்பினார். அதிலிருந்தே இருவருக்குமான மோதல் துவங்குகிறது. 
ஈழத் தமிழர் பிரச்சினையில் ஈடுபாடு ஈழத் தமிழர் பிரச்சினையில் ஈடுபாடு 2001 -2006, 2011 - 2016 ஜெயலலிதா ஆட்சிக் காலங்களிலும் பல முறை நடராஜன் கைது செய்யப்பட்டிருக்கிறார். 2011 - 2016 ல் நில அபகரிப்பு சம்மந்தமாக சில வழக்குகள் நடராஜன் மீது போடப்பட்டன. தேசிய அளவிலும் நடராஜனுக்கு நண்பர்கள் உண்டு. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர்கள் கன்ஷி ராம் மற்றும் மாயாவதி போன்றவர்களுடன் நட்பை வைத்திருந்தார் நடராஜன். இலங்கை தமிழர் பிரச்சனையில் தீவிர ஈடுபாடு இருந்தது. 
பழ நெடுமாறன் நடராஜனுக்கு நெருக்கமான நண்பர். நெடுமாறன் மட்டுமல்லாமல் தமிழ் தேசியம் பேசும் தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பல குழுக்களுக்கும் நடராஜன் நல்ல நண்பர்தான். நடராஜன் - சசிகலா திருமணத்தை 1974 ம் ஆண்டு நடத்தி வைத்ததே, அப்போதய தமிழக முதல்வர் மு.கருணாநிதிதான். இருந்தவர் இருந்தவர் அடிப்படையில் அரசு ஊழியராகத் தான் நடராஜன் இருந்தார்.
 ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். 1967 ல் திமுக ஆட்சி வந்த போது உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக தமிழக அரசில் வேலை கிடைத்தது. 1976ல் அவசர நிலைக் காலத்தின் போது பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர் 1980 ல் மீண்டும் அரசு வேலையில் சேர்ந்தார். ஜெ உயிருடன் இருக்கும் வரையில் அவர் எதிரில் கூட நடராஜன் வந்தது கிடையாது. 
ஆனால் ஜெ இறந்து, அவரது பூத உடல் சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப் பட்ட போது அங்கு அந்த சவப் பெட்டிக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். சுற்றிலும் சசிகலாவும், அவரது உறவினர்களும் தான் நின்று கொண்டிருந்தனர். அமைச்சர்கள் உட்பட மற்றவர்கள் அனைவரும் கீழே தான் இருந்தனர். யாரிடம் அஇஅதிமுக போய் விட்டது என்பதை மக்கள் அன்றே புரிந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக