செவ்வாய், 6 மார்ச், 2018

மதவெறிக்கு எதிரான வாட்சப் தன்னார்வ குழு

Ellaam Samam : வசந்தன் என்பவரின் வாட்ஸ் ஆப் பதிவு
நாங்கள் யார்? யூதர்களா? இலுமினாட்டிகளா?
நாங்கள் ஏன் மதவெறிக்கு எதிராக எப்பொழுதும் குரல் ஒலித்து கொண்டே இருக்கிறோம்? ..
சில உண்மைகளைப் பகிர்கிறேன்
சிறு வயதிலிருந்து கிறித்துவ மதம் என்மீது அதிகமாக திணிக்கப்பட்டதாலும் என் பெற்றோர்களின் கிறித்துவ மதவெறியால் நான் பல நல்ல விடயங்களை இழக்க நேரிட்டதாலும் என் தேடல் எப்பொழுதும் அறிவியல் சார்ந்ததாகவும் தமிழ் சார்ந்ததாகவுமே இருந்துள்ளது
2016 நவம்பர் இறுதியில் தவ்ஹீத் ஜமாத்தின் வாட்ஸ் ஆப் இசுலாமிய தவா குழுவில் எதேச்சையாக என்னை யாரோ இணைத்தார்கள்...
மதம் என்றாலே கசக்கும் எட்டிக்காயாக இருந்த எனக்கு அந்த குழு நல்ல பொழுது போக்கு.
நாளைடைவில் மதவெறி அடிப்படைவாதத்திற்கு எதிரான அணியில் அந்த வாட்ஸ் ஆப் குழுவிலுள்ள இறை மறுப்பாளர்கள் சிலர் கருத்தியல் ரீதியாக அறிமுகம் ஆனோம்
பிறகு எங்களுக்குள் ஒரு தனி வாட்ஸ் ஆப் குழு நியமித்தோம்
பின் அந்த குழுவில் உறுப்பினரான ஃபாரூக் என்பவர் திடீரென கோவையில் மதவெறியர்களால் வெட்டபட எனக்குள் மேலும் இசுலாமிய மதவெறியின் மீது கோபம் வந்தது
செப்டம்பர் 2017 ஒரு நன்னாளில் வாட்ஸ் அப் குழு இறை மறுப்பாளர்கள் ஒன்றாக சென்னையில் சந்திக்கலாம் என முடிவு கொண்டோம்
அதில் எனக்கு மேலும் ஆச்சரியமே காத்திருந்தது
சென்னை குரோமபேட்டையில் ஒரு குளிர் சாதன அறையில் ஒரு 4-5 நபர்கள் இருந்தனர்
நான் எதிர்த்த பார்த்த ஒரு நாத்திக நண்பர் அங்கு இல்லை என்றதும் ஒரு வேளை என்னை கொல்ல சதியோ என்று கூட பயந்தேன்.
ஆனால் அவரால் நகரக்கூட முடியாது என அறிந்தவுடன் என்னால் நம்பவே முடியவில்லை...உலக விடயங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் பேசும் அவரா என திரும்பவும் கேட்டேன்..
மேலும் மற்ற அனைவரையும் அன்றுதான் நான் கண்ணார கண்டேன். 25 வயது நிரம்பிய இம்ரான்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) முதல் 60 வயதை நெருங்கும் சமீர் வரை அனைவரும் விடிய விடியப் பேசிச் சிரித்து எங்களுக்குள் கருத்துகளை பரிமாரிக்கொண்டோம்
சிலர் நான் கொண்டு வந்த அயல் நாட்டு விஸ்கியை ஒரு சொட்டு கூட பருகவில்லை. நாத்திகரென்றாலும் குடித்துவிட்டுதான் களிப்பாக இருக்க வேண்டும் என்றில்லை என மறுத்து விட்டனர்..வியந்தேன்
ஒருவர் தன் 4 வயது மகனுடன் வந்திருந்தார்..அவனை மடியில் தூங்க வைத்தவாறே தன் கருத்துகளை பகிர்ந்தேன். அவருக்கு அந்த அவசியமும் இல்லை..
இசுலாமியரும் கிருத்துவரும் இந்துக்களும் எப்படி தங்கள் பெற்றோர்களின் மதங்களால் ஏமாற்றபட்டோம் இனியும் வருங்கால சந்ததியினர் எப்படி மதவெறியை எதிர்க்கலாம் என விவாதித்தோம்.இன்றுவரை எங்கள் கட்சிக்குப் பெயர் கூட இல்லை
கூட்டம் விடயற்காலை 4 மணிக்கு தான் முடிவடைந்தது. அனைவரும் கலைந்து வீட்டுக்குப் புறப்பட்டோம். என்னுடன் வந்த சமீர் என்ற சகோதரர் என்னுடைய ஊர் தாண்டிதான் செல்ல வேண்டும் என்பதால் என்னுடன் பேருந்தில் வந்தார்
என் பயணசீட்டும் அவரே எடுத்தார்.
அவர் கூறியது
"சகோ என் மனைவிக்கு புற்று நோய். பணமும் கஷ்டம்தான்...இதைவிட நான் நாத்திகனாக மாறியது என் மகனுக்கு தெரிய வந்துள்ளது. என்று என்னை அல்லாவின் பெயரால் கொல்வான் என்பது எனக்கு தெரியாது. இருந்தாலும் இந்த வயதிலும் என்னால் முடிந்த வரை இந்த மதவெறிக்கு எதிராக போராடுவேன்" என அவர் கூறியது சம்மட்டியால் அடித்தது..
இன்று வரை என்னால் முடிந்த மதத்திற்கெதிரான அறிவியல் பரப்புரையை நான் செய்து கொண்டு வருகிறேன்...
பயணம் வெகு தொலைவு...தூக்கம் இன்னமும் வரவில்லை...
உங்கள் வசந்தன்
நன்றி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக