செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

சிறுமி ஹாசினி கொலை மக்களுக்கு கற்றுத் தரும் பாடங்கள் என்ன...? - டாக்டர். ஷாலினி

நக்கீரன்: கமல்குமார்   அரசியலில் மூத்தவரான சகோதரர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன்: நடிகர் கமல்ஹாசன் காவிரி பிரச்சனையில் மறுசீராய்வு அல்லது புதிய வழக்கு...: விஜயதாரணி பேட்டி சிறுமி ஹாசினி கொலை வழக்கின் தீர்ப்பு வர இருக்கிறது. துன்புறுத்தி கொலை செய்து எரித்த தஸ்வந்த்திற்கு என்ன தண்டனை என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் மக்களுக்கு கற்றுத் தரும் பாடங்கள் என்னவென்று டாக்டர். ஷாலினி நக்கீரனுக்கு அளித்த பேட்டி...
 Dr.Shalini about Hasini Murder யாரிடம் கவனமாக இருக்கவேண்டும்... சமுதாயத்தில் நல்ல பையன், தத்துவங்களை பேசுபவன், பக்திமான் என பெயர் எடுத்தவர்கள்தான் குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்வதை பார்க்கிறோம். மற்றபடி முரட்டுத்தனமானவர்கள், பொதுவிஷயங்களில் பங்கு கொள்பவர்கள் தன் கவர்ச்சியால் பலரை கவர முடியும் என நம்பிக்கை இருப்பதால் அவர்கள் அவர்களுக்கு தகுதியான, சரிசமமான பெண்களுடன் உறவில் ஈடுபட முடிகிறது. தனக்கு சரிசமமான பெண்களை கவர முடியாதவர்கள்தான் குழந்தைகளை இலக்காக பார்க்கின்றனர்.


பெற்றோரிடம் எதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்ற தெளிவு இருக்கவேண்டும்... பொதுவாக பெற்றோர்கள் தனது குழந்தை சந்தோசமாக இருக்க வேண்டும். நம் பெற்றோர் நமக்கு அளிக்காததை நாம் நம் பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டும் என்று சந்தோசத்திற்கே முக்கியத்துவம் தருகின்றனர். இரண்டாவது, குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று அதற்கு முக்கியத்துவம் தருகின்றனர்.
அடுத்து, குழந்தைகளின் சாதனைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் இதைத்தவிர அடிப்படையான விஷயங்களான ஒழுக்கம் மற்றும் அறம் சார்ந்த விஷயங்களை சொல்லித்தர மறந்துவிடுகின்றனர். ஒன்று, அதை பள்ளி சொல்லித்தர வேண்டும் என நினைக்கிறோம் அல்லது அது வாழ்க்கைக்கு அவசியமில்லை என்று நினைக்கிறோம். இதுதான் நாம் தொடர்ந்து செய்துவரும் தவறு. அதனால் நாம் குழந்தைகளுக்கு அறத்தை கற்றுத்தர வேண்டும்.

 Hasini murder ஆண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியவை தனது சுயகட்டுப்பாடை எப்படி வைத்துக்கொள்வது, பெண்களிடம் எப்படி கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லித்தர வேண்டும். பெண் குழந்தைகளை பற்றி எப்படி பேச வேண்டும் பொதுவாக பெண் குழந்தைகளை நாம், "உனக்கு என்ன தெரியும் நீ பொண்ணுதான", என்று பேசுவோம். இதைப் பார்க்கும் குழந்தைகள், பெண் ஏதோ ஒரு போக பொருள் என்றோ, தன்னைவிட மதிப்பு குறைந்தது என்றோ நினைத்து  விடுகின்றனர். இதனாலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.

Daswanth Hasini Murder ஊடகங்களுக்கும் இதில் பங்குண்டு ஊடகங்கள் திரும்பத் திரும்ப பெண்ணை அரைகுறையாக காட்டுகின்றன. இதைப் பார்க்கிற ஆண்களுக்கு களவியல் இச்சை அதிகமாக தூண்டப்படுகிறது. அதற்கு நிகரான துணை இல்லாததால் அவன் தன்னைவிட சிறியவர்களை தேடி அலைகிறான்.

ஒரு பக்கம் சுய கட்டுப்பாடோடு இருக்கவேண்டும், இன்னொரு பக்கம் பெற்றோர்கள் கவனமாக வளர்க்க வேண்டும் என்று சொல்லும்போதே மூன்றாவதாக ஊடகமும் இதில் வருகிறது. இந்த சமுதாயமும், ஊடகமும் ஆண்களை திரும்பத் திரும்ப தூண்டிவிடுகிறது. நாம் ஊடகம் என்றவுடன் திரைப்படங்களை மட்டுமே பார்ப்போம். ஆனால் விளம்பரங்களையும், தொலைக்காட்சி நாடகங்களையும், யூ-டியூப் வீடியோக்களையும் மறந்து விடுகிறோம். ஊடகம் என்றால் அனைத்தும்தான். அனைத்திற்குமே அந்த கட்டுப்பாடு Read More Only at Nakkheeran.in:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக