செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

உவேசா ஏன் தொல்காபியத்தை தவிர்த்தார்? பதிப்பிக்கவில்லை ! தமிழ் இலக்கணம்?

Krishnavel T S : உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் சாமிநாதய்யர் என்கிற உ.வே.சா.
இவரை தமிழ் தாத்தா என்கிறார்கள்.
இவருக்கு நேற்று பிறந்த நாள் சில வேலைகள் காரணமாக கவனத்தில் இருந்து விடுபட்டுவிட்டார்.
தமிழ் மக்களின் தாத்தா என்ற பட்டம் கொடுக்குமளவுக்கான இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்ன என்றால்
பக்தியிலக்கியங்களாக தேடி தேய் அச்சில் பதிப்பித்தது மட்டுமே
தமிழுக்கு முழுக்க முழுக்க சைவ மத சாயம் பூசியதும் இவர் தான்.
பல நல்ல சங்கயிலக்கியங்கள் எல்லாம் பதிப்பித்துள்ளார் என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி
உ.வே.சா தொல்காப்பியத்தை ஏன் பதிப்பிக்கவில்லை என்பதே கேள்வி, அது முழுக்க முழுக்க இலக்கண நூல் அதில் இந்து பக்தி போன்றவற்றை சொருக முடியாது. என்பதே காரணம்,
உ.வே.சா-வுக்கு தொல்காப்பியதின் பிரதிகள் கிடைக்கவில்லை அதனால் தான் அவர் பதிப்பிக்கவில்லை என்று சோ, சுஜாதா போன்றவர்கள் சப்பைகட்டு கட்டுவார்கள்.
தொல்காப்பியத்தை முதலில் அச்சு வடிவில் பதிப்பித்தவர் யாழ்பாணத்தை சேர்ந்த தாமோதர பிள்ளை. அவர் கூறுவது, உ.வே.சா-வை சந்தித்து இலங்கையில் தமிழ் நூல்கள் பதிப்பிக்க சில ஓலைசுவடிகளை கடனாக கேட்க சென்றபோது சுமார் 13 தொலாப்பிய பிரதிகள் யாரும் சீந்துவார் இன்றி கிடந்ததாகவும், அதில் ஒன்றை வாங்கி வந்தே அவர் தொல்காப்பியத்தை பதிப்பித்தார் என்றும் சொல்லுவார்.

மேலும் உ.வேசா-வின் தந்திர பார்பன குணத்துக்கு மற்றுமொரு எடுத்துகாட்டு என்னவென்றால், 10-ஆம் நூற்றாண்டு காலத்தில் நம்பியாண்டார் நம்பி என்பவர், ராஜராஜனின் விருப்பத்திற்கு இணங்க பல புலவர்கள் எழுதிய சைவ சமய பாடல்களை எல்லாம் பன்னிரு திருமுறை நூல்கள் என்று தொகுக்கிறார்,
அந்த தொகுப்பின் 11ஆவது திருமுறையில் உள்ள 9ஆவது நூல் திருமுருகாற்றுப்படை.
இந்த நூலை வேண்டும் என்றே சங்கபாடல்கில் உள்ள பத்துப்பாட்டு தொகுப்பில் கொண்டு சேர்கிறார் உ.வே.சா, திருமுருகாற்றுப்படையை பத்துப்பாட்டில் சேர்க்க உண்மையான எந்த சங்க நூலை நீக்கினார் என்று அவருக்கு மட்டுமே தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக