செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

காப்பி அடிக்க அனுமதிக்கவில்லை என்றால் யாரும் தேர்வு எழுத மாட்டார்கள் உபி முதல்வர் யோகி ஆதித்திய நாத்

தினகரன் :லக்னோ: தேர்வில் காப்பி அடிக்க அனுமதிக்கவில்லை என்றால் யாரும் தேர்வு எழுத மாட்டார்கள் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் தற்போது பள்ளி இறுதி ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்துள்ள 4 தேர்வுகளில் மொத்தம் 10 லட்சம் பேர் எழுதவில்லை, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களும் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மாணவர்கள் தேர்வு எழுதாதற்கு கருத்து தெரிவித்த யோகி ஆதித்யநாத் மாணவர்களுக்கு கஷ்டமாக கேள்வி கேட்டால் இப்படித்தான் செய்வார்கள், அவர்களுக்கு இனி எளிதாக கேள்வி கேளுங்கள், அவர்களை தேர்வு அறைக்கு கொண்டு வாருங்கள் என்றும் கூறியுள்ளார். தேர்வில் மாணவர்களை காப்பி அடிக்க விடாமல் நிறைய விதிமுறைகள் இருக்கிறது, இதனால்தான் இந்த முறை 10 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக