திங்கள், 5 பிப்ரவரி, 2018

மே.வங்கம் - மம்தா பானர்ஜியின் TMC பெற்ற வெற்றி மோசடிகள் மூலம் பெறப்பட்டது?

Chinniah Kasi : திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது எப்படி?
வாக்குச் சாவடிகளில் நடந்தது என்ன?
(உலுபெரியாவில் சூறையாடப்பட்ட சிபிஎம் அலுவலகம்)
மேற்குவங்கத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் உலுபெரியா மக்களவைத் தொகுதியிலும், நோயாபரா சட்டமன்றத் தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. உலுபெரியாவில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், நோயாபராவில் 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இவற்றை ஊடகங்கள் “மமதா அரசாங்கத்தின் வளர்ச்சிக் கொள்கைகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி“ என்று தம்பட்டம் அடிக்கின்றன.ஆனால் இவ்விரு தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ரவுடிகள் ஆடியுள்ள வன்முறை வெறியாட்டங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.இரு தொகுதிகளிலும் வாக்குச் சாவடிகளுக்கு வந்த இடது முன்னணி முகவர்கள் துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். வாக்களிக்க வந்த வாக்காளர்களும் மிரட்டப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். நோயாபரா தொகுதியில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற வாக்காளர்கள் அடித்துத் துரத்தப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வரவே அனுமதிக்கப்படவில்லை. இவர்களுக்குப் பதிலாக பல தொகுதிகளிலிருந்தும் திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பதற்காக ‘வாக்காளர்கள்‘ இறக்குமதி செய்யப்பட்டார்கள்.
சில இடங்களில் வாக்குச்சாவடிகளில் பதிவாகியுள்ள வாக்குகளும், திரிணாமுல் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பெற்ற வாக்குகளையும் பார்த்தால் இதனைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.

உலுபெரியா தொகுதியில் பக்னான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில், வாக்குச்சாவடி எண்ணும், ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் வருமாறு:இவை சில எடுத்துக்காட்டுகள்தான். நூற்றுக்கணக்கான வாக்குச் சாவடிகளின் நிலைமைகள் இதுதான். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் ஜனநாயகம் எந்த அளவிற்கு காலில்போட்டு மிதித்துத் துவைக்கப்படுகிறது என்பதனை இந்த விவரங்கள் துல்லியமாகக் காட்டுகின்றன.கணசக்தி ஆசிரியர் தெபாஷிஷ் சக்ரவர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக