திங்கள், 5 பிப்ரவரி, 2018

1961 - 1969 இல் MGR வரி எய்ப்பு செய்த தொகை 29 லட்ச ரூபாய் .. ஆரியத்தின் சூழ்சிகளும் துணைபோன....

சாய் லட்சுமிகாந்த் :1961 முதல் 1969 வரை  MGR  வரி எய்ப்பு செய்த தொகை 29 லட்ச ரூபாய் (இன்றைய மதிப்பில் பல கோடிகள் தேறும். ஜெயா 20 வருடம் முன் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த 63 கோடி சொத்துகள் இன்றைய மார்கெட் ரேட் 5000கோடியை தாண்டும் என்றால் 50 ஆண்டுகளுக்கு முன் 29 லட்ச ரூபாயின் மதிப்பு என்னவாக இருக்கும் என்பதை உங்களின் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்).
1971ம் ஆண்டு அந்த நிலுவை தொகையில் 17 லட்சத்து 96 ஆயிரத்து 407 ரூபாய் வரி செலுத்தினார். மிச்சமுள்ள தொகையை செலுத்த அவர் மீது வருமானவரித்துறை கிடுக்கிப்பிடி போட்ட போது 486/1972 எண் ரிட் மனு போட்டு அந்த நடவடிக்கைகளுக்கு தடை வாங்கினார் MGR  7.9.1972ல் அந்த மனுவை திரும்பப் பெறுகிறார் .
 08.09.1972ம் தேதி, அதாவது மறுநாளே திமுக மீது புகார் சொல்ல தொடங்குகிறார். பிறகு கணக்கு கேட்கிறார், அப்போது இவர் தான் திமுகவின் பொருளாளர், பிறகு கட்சியை விட்டு "தற்காலிகமாக" விலக்கப்படுகிறார். அதன் பின் நடந்தது அனைவருக்கும் தெரியும்.
சர்க்காரியா கமிஷன் பின்னும் MGR இன்   தனியாவர்த்தனம் பின்னும் அதனால் தமிழகம் பத்து ஆண்டுகள் அனுபவித்த கஷ்டங்களுக்கும் பின்னணியில் இருந்தது யார் என்பதை பட்டவர்த்தனமாக சாட்சியம் கூறுவது தான் மேல் உள்ள தகவல். தகவல்: சர்க்காரியா கமிஷன் - ஒரு சதி வலை #SarkariaCommision #DMKmythbusting

1972 எம்.ஜி.ஆரும், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கல்யாணசுந்தரமும் தி.மு.க மீது புகார் பட்டியலை தயார் செய்து கவர்னரிடம் கொடுத்து குடியரசு தலைவரிடிம் அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். அந்த புகார் பெட்டியில் யார் மீது என்ன புகார் என்ற கேள்விக்கு இருவரிடமும் எந்த பதிலும் இல்லை. அப்படி யார் மீதாவது புகார் சொன்னால் அவதூறு வழக்கு சந்திக்க நேரிடும் என்று எம்.ஜி.ஆர் பயந்தார். -சர்க்காரியா கமிஷன்- ஒரு சூழ்ச்சி வலை புத்தகத்தில் இருந்து....

"ஜனநாயகத்தில் எள் அளவும் நம்பிக்கையற்றோர் நமது தலை சிறந்த ஜனநாயக நிறுவனங்களைக் கவிழ்த்து அழிக்க முற்படுவோர்- இவர்கள் எத்தகைய குற்றச்சாட்டுகளையும் எவர் மீதும் சுமத்துகின்றனர்; இவர்களை யாரும் ஏதும் செய்வதற்கில்லை. இதனால் நம் பொது வாழ்வு ஏளனத்திற்குரிய இழிநிலைக்கு தாழத்தப்படுகின்றது.
இதுவே அரசியல் சூதாட்டத்தில் அவலமுற்று அலைவோரின் ஆர்வமிக்க பொழுது போக்காக உள்ளது" சர்க்காரியா கமிஷன் அமைப்பதற்கு முன் எம்ஜியாரும்  கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரமும் கலைஞர் மீது வாசித்த பொய் புகார்களை கலைஞரிடமே அனுப்பி விளக்கம் கேட்ட அன்றைய பாரத பிரதமர் இந்திரா காந்திக்கு பதில் கடிதம் அனுப்பினார் தலைவர் கலைஞர். அந்த கடிதத்தின் ஒரு பகுதியே மேலே சொன்ன வரிகள். 40 ஆண்டுகளுக்கு பிறகும் அதை பொறுத்தி பார்க்க முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக