திங்கள், 5 பிப்ரவரி, 2018

பசுக்களுக்கும் ஆதார் காட் அவசியம்.. 4 கோடி பசுக்களுக்கு 50 கோடி செலவில் ஆதார்..

Special Correspondent FB Wing : இந்தியாவில் உள்ள 4 கோடி பசுக்களுக்கு 50 கோடி செலவில் ஆதார்
இறைச்சிக்காக பசுக்களை கடத்தி செல்வது அதிகமாகி வருகிறது. என்று கூறி இந்தியாவில் உள்ள 4 கோடி பசுக்களுக்கு முதல்கட்டமாக 50 கோடி செலவில் ஆதார் போல அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் பசுவின் உரிமையாளர்கள் மற்றும் பசுவை வாங்கி செல்பவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் காணப்பட்டது.
இந்நிலையில் பசுக்களுக்கும் இதுபோன்ற அடையாள அட்டை வழங்க பா.ஜ.க. அரசு முடிவு செய்தது.

இந்திய வங்காள தேச எல்லைப் பகுதியில் பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் இந்துத்துவா
அமைப்பின் மூலம் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான விசாரணையின் போது பசு கடத்தலை தடுப்பது தொடர்பாக நிபுணர்கள் குழு அமைத்து அறிக்கை சமர்பிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பசு கடத்தலை தடுக்க, குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை போன்று பசுக்களுக்கும் தனித்துவமான அடையாள சான்று வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் நிபுணர்கள் குழு பரிந்துரை செய்தது.
இதைத்தொடர்ந்து தற்போது பசுக்களுக்கு ஆதார் போன்று அடையாள அட்டையை வழங்க அரசு முடிவு செய்து அதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 4 கோடி பசுகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கி எல்லா மாடுகளுக்கும் ஆதார் போன்று அடையாள அட்டையை வழங்க மோடி அரசு முமுமரமாக உள்ள நிலையில் இந்த திட்டம் மூலம் எப்படி கடத்தப்படுவதை தடுக்க முடியும் என்று சட்ட வல்லுனர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் .
மேலும் கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்று கூறி தோல்வியில் முடிந்த பணமதிப்பிழப்பு போலவே இதுவும் முடியும் என்றே கருத்தும் தெரிவித்து உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக