திங்கள், 5 பிப்ரவரி, 2018

கேடுகெட்ட பாஜக ! பாஸ்போர்டிலும் மனுதர்ம வர்ணனாசிரமம் அதிகாரிகளுக்கு வெள்ளை நிறம், உயரதிகாரிளுக்கு பழுப்பு , சாதா மக்களுக்கு... படிக்காதவர்களுக்கு...

நக்கீரன்: சிலநாட்களுக்கு முன் பாஸ்போர்ட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்களுக்கு ஆரஞ்ச் நிறத்தில் கடைசி பக்கம் விவரங்கள் இல்லாமலும் பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. கேரள உயர்நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு இந்த முடிவை கைவிடுவதாக தெரிவித்துள்ளது. பாஸ்போர்ட் வெள்ளை, நீலம், பழுப்பு (White, Blue, Maroon) ஆகிய மூன்று நிறங்களில் இருக்கும். வெள்ளை நிற பாஸ்போர்ட் இந்திய அரசை முன்னிறுத்தும் விதமாக செல்லும் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும். பழுப்பு நிற பாஸ்போர்ட் இந்திய அரசின் முக்கிய உயர் பதவிகளில் இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு வாழங்கப்படுவதாகும். நீல நிற பாஸ்போர்ட் நீல நிற பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கானது. இதிலும் இரண்டு வகை உள்ளது. ஒன்று பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்கள். இன்னொரு வகை பத்தாம் வகுப்பிற்கு கீழ் படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்களுக்கானது.


அரசு தற்போது பத்தாம் வகுப்பிற்கு கீழ் படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்களுக்கான பாஸ்போர்ட்டின் வண்ணத்தைத்தான் ஆரஞ்ச் நிறமாக மாற்ற இருந்தது.
முன்பு நீல நிற பாஸ்போர்ட்டில் ஒரு முத்திரை வைக்கப்படும் இதை வைத்து மட்டுமே அவர்கள் படித்தவர்களா இல்லை படிக்காதவர்களா என அறிய முடியும்.

ஆனால் அவர்களுக்கான பாஸ்போர்ட் ஆரஞ்சு நிறத்தில் மாற்றப்பட்டால் அவர்கள் தூரத்தில் இருக்கும்போதே அவர்களை வேறுபடுத்திவிட முடியும். இதனால் அவர்கள் நடத்தப்படும் விதமும் , அவர்களுக்கான சுயமரியாதையும் குறையும். இதனால்தான் இந்த புதிய திருத்தத்திற்கு அனைத்து தரப்பிலும் இருந்து எதிர்ப்பு வந்துகொண்டிருந்தது. அரசு இதற்கு அவர்களின் பாதுகாப்பு கருதிதான் இந்த முடிவெடுத்தோம் என கூறுகிறது.

ஒருவனின் சுயமரியாதையும், அவன் நடத்தப்படும் விதமும் மாறும் பொழுதுதான் அவனின் பாதுகாப்பிற்கு ஆபத்து வரும். இதை தடுப்பதாக சொல்லி, அதற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்க இருந்தது மத்திய அரசு. நல்லவேளையாக அது தடுக்கப்பட்டுள்ளது. -கமல் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக