ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

மகிந்த ராஜபக்சே மைத்துனர் துபாய் விமான நிலையத்தில் கைது ,,, சிராந்தி ராஜபக்சவின் சகோதரர்

 Former Ambassador to Russia Udayanga Weeratunga has been arrested by INTERPOL at Dubai Airport a short while ago. A special Police Team has flied to Dubai to bring to Sri lanka , reported FCID. He was questioned at Dubai Airport while in transit to United States of America earlier today (04), according to his family sources
Ajeevan Veer :: மகிந்தவின் மனைவியின் சகோதரர் உதயங்க வீரதுங்க டுபாய் விமான நிலையத்தில் கைது!
ரஸ்யாவின் முன்னாள் ஶ்ரீலங்காவுக்கான தூதுவராக செயலாற்றியவரும் , முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி அவர்களது அண்ணனுமான உதயங்க வீரதுங்க டுபாய் விமான நிலையத்தில் வைத்து கைதாகியுள்ளார். இவரை கைது செய்யுமாறு இன்டர்போலிடம் இலங்கை அரசு > ஏற்கனவே அறிவித்திருந்தது. இவர் தற்போது உக்ரேயினில் வாழ்ந்து வருகிறார். அவரிடம் உக்ரேயின் நாட்டு குடியுரிமையும் உள்ளது. எனவே அவரை கைது செய்த டுபாய் அதிகாரிகளிடம் , தன்னை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றும் , திருப்பி உக்ரேயினுக்கு அனுப்புமாறு அவர் வாதாடியுள்ளார்.
டுபாய் அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, அவரை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்கள்.
அவரை கைது செய்து அழைத்து வர ஶ்ரீலங்கா குற்ற புலனாய்வு துறை அதிகாரி ரவி வித்யாலங்கார இன்று இரவு ஒரு குழுவினரோடு டுபாய் பயணமாகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக