திங்கள், 8 ஜனவரி, 2018

ரஜினி பாபா சின்னம் ...செவிப்புலன் அற்றோர் மொழியை களவாடிய ரஜினியும் வோக்ஸ்வெப் நிறுவனமும்

Brinda Keats : வாய் பேச காது கேட்க முடியாதவங்களுக்கான சைகை பாஷையில் இது "நான் உன்னை நேசிக்கிறேன்" அப்படின்னு அர்த்தம். பாவம் ரிடையர் ஆன ஒபாமாவை எல்லாம் இழுத்துட்டு
சைகை மொழி சைகையின் அர்த்தம் புரியாமல் ரஜினியும் வோக்ச்வேப் நிறுவனமும் ஆளாளுக்கு அந்த மொழியை களவாடி தற்போது மாட்டி கொண்டார்கள்
நக்கீரன் : ரஜினியின் பாபா முத்திரை தங்களது நிறுவனத்தின் லோகோவைப் போல இருப்பதாக, மும்பையைச் சேர்ந்த சிறுநிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. சமூக வலைதள செயலி நிறுவனமான ‘வோக்ஸ்வெப்’ என்ற இந்த நிறுவனத்தின் லோகோ, நடுவிரல்கள் கீழிறங்கியும், கட்டைவிரல் உள்ளிட்ட மற்ற விரல்கள் மேல்நோக்கி இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டது. இந்த நிறுவனம் சார்ந்தவர்கள் ரஜினியின் அரசியல் கட்சியோடு ஏதேனும் தொடர்புள்ளதா என கேள்வி எழுப்பிய பின்னர் இந்த நிறுவனம், இதுகுறித்து ரஜினியிடம் முறையிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது அவர் 2002ஆம் ஆண்டு தான் நடித்து வெளியான பாபா படத்தில் பயன்படுத்தப்பட்ட அதே முத்திரையை தனது ரசிகர்களுக்கு முன் காட்டினார்.
மேலும், தனது ரஜினி மன்றத்தின் இணையதளத்திலும், ராகவேந்திரா மண்டப மேடையிலும் அந்த முத்திரையை ரஜினிகாந்த் பயன்படுத்தி இருந்தார். இதுகுறித்து வோக்ஸ்வெப் நிறுவனம், ‘வேறொரு நிறுவனத்தின் முத்திரை எங்களுடையதைப் போல இருந்தால் பிரச்சனையில்லை. சமூக வலைதளம் அல்லது அரசியல் கட்சி அதே முத்திரையைப் பயன்படுத்தினால் குழப்பமே உண்டாகும். இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். இன்னமும் பதில் கிடைக்கவில்லை’ என தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக