ஞாயிறு, 21 ஜனவரி, 2018

குரங்கில் இருந்து மனிதன் .. டார்வின் தத்துவம் தவறு பாஜக அமைச்சர் ..... மத்தியிலும் ஒரு செல்லூர் ராசு


தினத்தந்தி :குரங்கிலிருந்து மனிதன் என்ற டார்வின் கோட்பாடு தவறானது: மத்திய மந்திரி கண்டுபிடிப்பு குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற சார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாடு தவறாது எனவும், அதை பாட புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய இணை மந்திரி சத்யபால் சிங் கூறியுள்ளார். மும்பை: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணை மந்திரி சத்யபால் சிங் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் வெள்ளிக்கிழமை நடந்த ‘அகில இந்திய வேதிக் சம்மேளனம்’ மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு பேசிய அவர், மனித பரிணாம வளர்ச்சி பற்றிய சார்லஸ் டார்வின் கோட்பாட்டை தவறு என விமர்சித்தார். “குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
நம்முடைய மூதாதையர்கள் யாரும் இந்தக் கருத்தை எழுதவும் இல்லை. வாய்வழி வார்த்தையாகக் கூட சொன்னது இல்லை. பூமி உருவான காலத்தில் இருந்தே மனிதன் மனிதனாகத்தான் இருந்தான். டார்வினின் இந்த கோட்பாடு அறிவியல் பூர்வமாகவே தவறானது. இதை பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்” என்று அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார். சத்யபால் சிங் ஓய்வு பெற்ற ஐ,பி.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக