ஞாயிறு, 7 ஜனவரி, 2018

கோவில் கொடைகள் ...சாதி இந்துக்களின் சாதி மனப்பான்மை.... ஒரு தீய நெருப்பு சக்கரம்

Vijay Bhaskarvijay : ஆடி மாதம் வந்தால் நிறைய கோவில் கொடைகள் நடக்கும்.
வடமாவட்டங்கள், கொங்கு ஏரியா பற்றி எனக்கு தெரியாது தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மூன்று மாவட்டங்களிலும் நிறைய நிறைய கோவில் கொடைகள் நடக்கிறது.
நாடார்கள் ஒன்று இணைந்து ஒரு கோவிலுக்கும் தெய்வத்துக்கும் விழா எடுப்பார்கள்.
தேவர்கள் ஒன்று இணைந்து ஒரு கோவிலுக்கும் தெய்வத்துக்கும் விழா எடுப்பார்கள்.
கோவிலுக்குள் ஒரு தலித் நுழைந்து விட முடியாது.
ஒரு நாடார் குடும்பத்து பையன் தலித் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் எந்த கோவில் கொடைக்கும் அந்த நாடாரை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
ஒரு தேவர் குடும்பத்துப் பையன் தலித் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் எந்த கோவில் கொடைக்கும் அந்த தேவரை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
கோவில் கொடையை விட்டு ஒதுக்கி விடுவார்களே என்று பயந்து காசு பணத்தில் ஒரு தலித் இளைஞன் அல்லது யுவதி எவ்வளவு முன்னேறினாலும் அவனை திருமண உறவில் இருந்து ஒதுக்கியே வைக்கிறார்கள்.
நான் என்ன கேட்கிறேன் குறிப்பாக Specific ஆக இந்த Trend ஐ எதிர்த்து சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதுதான்.
”ஐயா நீங்கள் கொண்டாடும் சாதி இந்து கோவில் கொடைகளை கொஞ்சம் மறுபரிசீலினை செய்யுங்கள். அனைவரும் ஒரே சமூகமாவது ஒன்றும் முடியாத காரியமல்ல. படித்த இளைஞர்கள் தலித் உறவுகள் ஏற்படுத்திக் கொண்டாலாவது அதை ஏற்றுக் கொள்ளலாமே” என்று மிக மிக பணிவுடன் கோரிக்கை வைக்க கூட இங்கே ஆள் இல்லை.
ஒரு போஸ்டர் அடித்து ஒட்டும் தைரியம் கூட இங்கே யாருக்குமில்லை.
திமுக இந்த கோரிக்கையை வைக்காது.
திக இந்த கோரிக்கையை வைக்காது.
அதிமுக இந்த கோரிக்கையை வைக்காது.
காங்கிரஸ் இந்த கோரிக்கையை வைக்காது.
விடுதலை சிறுத்தைக்கு வழியில்லை. வெறுப்புணர்வில் சாதி இந்துக்கள் பேசக் கூட மாட்டார்கள்
கம்யூனிஸ்டுகள் கூட ஊரில் ஒரு தலித் அடக்குமுறை வந்தால் அங்கே குரல் கொடுக்கிறார்களே தவிர , இந்த டிரண்டை எதிர்த்து குறிப்பாக பிரச்சாரம் செய்கிறார்களா என்று தெரியவில்லை.

ஆக “சாதி இந்துக்களின் சாதி மனப்பான்மை” என்ற தீய நெருப்பு சக்கரத்தைக் கண்டு நாம் அனைவரும் பயந்து ஒடிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.
அதை எதிர்த்து குறிப்பாக தெளிவாக ஒரு பிரச்சாரமும் வைக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
அனைத்துக் கட்சிகளும் பொத்தாம் பொதுவாக மார்க்ஸ் பெரியார் அம்பேத்கர் என்று பேசிவிட்டு Specific ஆக சாதி இந்துக்களின் சாதி மனப்பான்மை எதிர்க்காமல் அல்லது அவர்களுக்கு புரிய வைக்க கூட முயற்சி செய்யாமல் இருந்திருக்கிறது.
70 வருடங்களாக இதை குறிப்பாக செய்யாத விளைவு இப்போது அவர்கள் மறுபடியும் சாதி அரசியலை தூக்கிப் பிடிக்கிறார்கள். சாதி அரசியலுக்கு தோதான வைதீகத்தையும் பார்ப்பனியத்தையும் கொண்டாடுகிறார்கள்.
இது எங்கே போய் முடியும்?
திமுக அதிமுக போன்ற கட்சித்தலைவர்கள் சதுர்த்தி ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைப்பதில் போய் முடியும்.
“சாதி இந்துக்களின் சாதி மனப்பான்மை” என்ற தீய நெருப்பு சக்கரத்தில் எப்படி கைவைப்பது என்ற திட்டம் இல்லாமல் சமூக மாற்றம் சாத்தியமே இல்லை.
தென் தமிழகத்தில் நடக்கும் கோவில் கொடை விழாக்களில் இருந்து இதை ஆரம்பியுங்கள்.
நாம் செய்வது சாதி வெறியான கோவில் கொடை என்று தெரியாமலேயே பல சாதி இந்துக்கள் அதை செய்து வருகின்றனர்.
“நீங்கள் செய்வது தவறு” என்று சிரித்தபடியே அன்பாக மென்மையாக சொன்னால் கூட போதும்.
நம்முள் (சமூக நீதி அக்க்றை கொண்டோர்) யார் சொல்வார்கள் அதை ????????????????

Suganya Samidoss :ஆதிக்க சாதி பையன்கள் தலித் பெண்களை திருமணம் செய்கிறார்கள் என்பதற்கு அவ்வளவாக உதாரணம் இல்லை, அதில் அவர்கள் அவ்வளவு உறுதியாக உள்ளார்கள் என்றே கூறலாம். ஆனால் தலித் பையன்கள் கொஞ்சம் படித்து நல்ல வேலையில் சேர்ந்து விட்டாலும் பெரும்பாலும் உயர் சாதி பெண்களைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். இதுபோன்ற சாதி மறுப்பு திருமணம் செய்யும் தலித் ஆண்கள் பெரும்பாலும் தங்கள் சாதி குறித்த தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாகவே உள்ளனர். முதலில் இவர்கள் மாற வேண்டும்.

Karthikeyan Fastura :இதை எப்படி தாழ்வுமனப்பான்மையாக பார்கிறீர்கள். நான் படித்தேன், என்னை தகுதி படுத்திக்கொண்டேன், எந்த சாதியென்றும் பார்க்காமல் ஒரு பெண்ணை காதலித்தேன். மணமுடித்தேன் என்பது எப்படி தாழ்வுமனப்பான்மையாக கருத முடியும். தலித்துகள் காதலிக்கிறார்கள் தலித்திய, இஸ்லா
மிய, கிறித்துவ, பிராமண, வெள்ளாள, முதலியார் பெண்களை கூட மணமுடிக்கிறார்கள்.
//தலித் பையன்கள் கொஞ்சம் படித்து நல்ல வேலையில் சேர்ந்து விட்டாலும் பெரும்பாலும் உயர் சாதி பெண்களைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள்// என்ன ஒரு நாசூக்கான சாதிய விஷம்.?
உண்மை தெரியுமா.. பெரும்பாலான காதல் கதைகளில் பெண்கள் தான் அவர்களை காதலிக்கிறார்கள். முதல் தலைமுறையாக படித்து வரும் அவர்கள் மிக கண்ணியமாகவும், கடும் உழைப்பாளிகளாகவும், உண்மையாகவும் இருக்கிறார்கள். பெண்களை இளக்காரமாக பார்ப்பதில்லை. மரியாதை கொடுக்கிறார்கள். அது தான் எந்த சாதி, மத பெண்களையும் அவர்கள் பக்கம் ஈர்க்கிறது. இது இயற்கை.
உண்மையில் தாழ்வுமனப்பான்மை கொண்டவர்கள் சாதி இந்துக்களே. படித்த தலித் இளைஞர்கள் தனக்கு நிகராக, தன்னைவிட வளர்வதை காணும்போது உருவாகும் கோபம் ஏன் வருகிறது. தாழ்வுமனப்பான்மையால் தானே. முதலில் அவர்கள் தானே மாற வேண்டும்.

கம்யூனிஸ்ட்டுகள், பெரியாரிஸ்ட்டுகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. தலித்துக்காக நாங்கள் குரல் கொடுப்போம் அவர்கள் கொடுக்கக்கூடாது என்று எண்ணம் கொண்டவர்கள். உங்கள் சாதிய புத்தியை ஒருமுறை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
ஆதிக்க சாதி பையன்கள் தலித் பெண்களை திருமணம் செய்கிறார்கள் என்பதற்கு அவ்வளவாக உதாரணம் இல்லை// இதில் என்ன உத்தமம் இருக்கிறது? அவர்களின் சாதி  புத்தி தான் தெரிகிறது. பயம் தெரிகிறது. ஆணாதிக்க புத்தி தெரிகிறது.

Vijay Bhaskarvijay Karthikeyan Fastura என் சாதி குறைவான ஒன்று.. அதில் உள்ள பெண்களும் குறைவானவர்களே என்ற ரீதியில் நினைத்து ஒரு இளைஞன் தாழ்வு மனப்பான்மை அடைவது சாதரண விஷயமாகத்தான் நினைக்கிறேன். அது மனதில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவது பார்ப்பனியம்தான்.
Karthikeyan Fastura Akila Kamaraj :Yes. You can't anything wrong in casteism. Thus You CAN NOT find anything wrong in male chauvinism. Bravo

 Vijay Bhaskarvijay Suganya Samidoss சொல்வதில் ஒரு உண்மை இருந்தாலும், ஒரு பெரிய விஷயத்தை சொல்லும் போது அந்தப் புரிதலை திசை திருப்பும் விதமாகவே அக்கருத்து தெரிந்தோ தெரியாமலோ அமைந்து விடுகிறது. பெண்களே பெண்களுக்கு எதிரி மாதிரி கருத்துதான் இதுவும். // தலித் பையன்கள் கொஞ்சம் படித்து நல்ல வேலையில் சேர்ந்து விட்டாலும் பெரும்பாலும் உயர் சாதி பெண்களைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். // அதுவும் ஒரு பார்ப்பனிய மனநிலைதான். இங்கே ஒட்டு மொத்த சமுதாயமும் பார்ப்பனியத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் போது தலித் இளைஞர்கள் மட்டும் ஒரே நாளில் சீர்திருத்தவாதிகளாக எப்படி மாறிவிட முடியும். அவர்களுக்கு பெஸ்ட் என்று தோன்றுவதை நோக்கிதான் போவார்கள். ஆனால் சாதி இந்து பெண்கள்தான் பெஸ்ட் என்ற சிந்தனை என்ற கருத்து அவர்களுக்குள் எப்படி திணிக்கப்படுகிறது. எப்படி சமுதாயத்தில் உருவாக்கி வைக்கப்பட்டிருகிறது. அதை நோக்கிதான் நம் அறிவு ஆயுதம் இருக்க வேண்டும். மற்ற படி இதை “முதன்மையான” பாயிண்டாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

 Karthikeyan Fastura இதில் என்ன உண்மை இருக்கிறது என்று எனக்கு நீங்கள் புள்ளிவிவரத்துடன் எடுத்துவையுங்கள் விஜய்

 Vijay Bhaskarvijay Karthikeyan Fastura என் சாதி குறைவான ஒன்று.. அதில் உள்ள பெண்களும் குறைவானவர்களே என்ற ரீதியில் நினைத்து ஒரு இளைஞன் தாழ்வு மனப்பான்மை அடைவது சாதரண விஷயமாகத்தான் நினைக்கிறேன். அது மனதில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவது பார்ப்பனியம்தான். அதைத்தான் நான் அங்கே அந்த கமெண்டில் சொல்லி இருக்கிறேன்

Karthikeyan Fastura Vijay Bhaskarvijay //அதில் உள்ள பெண்களும் குறைவானவர்களே என்ற ரீதியில் நினைத்து ஒரு இளைஞன் தாழ்வு மனப்பான்மை அடைவது சாதரண விஷயமாகத்தான் நினைக்கிறேன்//
சாதிய எண்ணத்திற்கு வலுவூட்டும் வறட்டு வாதம். நான் மேலே எழுதிய கமென்ட்டை இங்கு Paste செய்கிறேன். எதற்கு வாய்ப்பு அதிகம் என்று நீங்கள் சொல்லுங்கள்

இதை எப்படி தாழ்வுமனப்பான்மையாக பார்கிறீர்கள். நான் படித்தேன், என்னை தகுதி படுத்திக்கொண்டேன், எந்த சாதியென்றும் பார்க்காமல் ஒரு பெண்ணை காதலித்தேன். மணமுடித்தேன் என்பது எப்படி தாழ்வுமனப்பான்மையாக கருத முடியும். தலித்துகள் காதலிக்கிறார்கள் தலித்திய, இஸ்லாமிய, கிறித்துவ, பிராமண, வெள்ளாள, முதலியார் பெண்களை கூட மணமுடிக்கிறார்கள்.

உண்மை தெரியுமா.. பெரும்பாலான காதல் கதைகளில் பெண்கள் தான் அவர்களை காதலிக்கிறார்கள். முதல் தலைமுறையாக படித்து வரும் அவர்கள் மிக கண்ணியமாகவும், கடும் உழைப்பாளிகளாகவும், உண்மையாகவும் இருக்கிறார்கள். பெண்களை இளக்காரமாக பார்ப்பதில்லை. மரியாதை கொடுக்கிறார்கள். அது தான் எந்த சாதி, மத பெண்களையும் அவர்கள் பக்கம் ஈர்க்கிறது. இது இயற்கை.

உண்மையில் தாழ்வுமனப்பான்மை கொண்டவர்கள் சாதி இந்துக்களே. படித்த தலித் இளைஞர்கள் தனக்கு நிகராக, தன்னைவிட வளர்வதை காணும்போது உருவாகும் கோபம் ஏன் வருகிறது. தாழ்வுமனப்பான்மையால் தானே. முதலில் அவர்கள் தானே மாற வேண்டும்.

கம்யூனிஸ்ட்டுகள், பெரியாரிஸ்ட்டுகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. தலித்துக்காக நாங்கள் குரல் கொடுப்போம் அவர்கள் கொடுக்கக்கூடாது என்று எண்ணம் கொண்டவர்கள். உங்கள் சாதிய புத்தியை ஒருமுறை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

 Vijay Bhaskarvijay Karthikeyan Fastura இப்படி பாருங்கள். ஒரு படித்த தலித் இளைஞன் சாதி இந்து யுவதியை காதலிக்கிறான். அக்காதலை எதிர்க்கும் சாதிவெறியை எதிர்க்க வேண்டும். அதில் மாற்று கருத்தே இல்லை. அதே சமயம் ஏன் ஒரு தலித் இளைஞனுக்கு தலித் பெண் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. தன் பிறப்பையே அவன் தாழ்வாக பார்க்கிறான். தன் பிறப்பின் சாதியின் சக பிறப்பான பெண்களை அவன் தாழ்வாக பார்க்கிறான். அதனால் தலித் பெண்ணை அவன் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை. அதற்கு காரணம் அந்த தாழ்வு மனப்பான்மைதான்.. இதைத்தான் சுகன்யா சொல்ல வருகிறார். ஒரு தலித் இளைஞன் சாதி இந்து பெண்ணை திருமணம் செய்வதில் தன்னம்பிக்கை இருக்கிறது என்றாலும் ஏன் தலித் பெண்களை அவன் கண்டுகொள்ளவில்லை என்பதற்கு பின்னால் இருக்கும் மனநிலை என்ன யோசிக்கும் போது சுகன்யாவின் கமென்ட் வருகிறது... அதே சமயம் அவன் அதற்கு பொறுப்பில்லை என்பதும். அதன் பொறுப்பு பார்ப்பனியம்தான் என்பது பற்றியும் சொல்லி இருக்கிறேன்..

 Vijay Bhaskarvijay Karthikeyan Fastura நானும் சுகன்யாவின் அக்கருத்தை இந்த இடத்தில் எதிர்க்கவே செய்கிறேன். ஆனால் அக்கருத்தில் உண்மையே இல்லையென்று இடது கையால் ஒதுக்கி விட முடியாது. சாதி பற்றிய தாழ்வு மனப்பான்மை உண்டு பண்ணுவதுதான் பார்ப்பனியத்தின் முதல் தந்திரம். நீங்கள் தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் எப்படி சாதி இந்து பெண்ணை காதலித்திருப்பான் என்கிறீர்கள். நான் அந்த கோணத்தில் உள்ள மனநிலையை சொல்லவில்லை. நான் சொல்வது படித்த தலித் இளைஞனுக்கு இரண்டு ஆப்சன்கள் இருக்கின்றன ஒன்று சாதி இந்துப் பெண்.. ஒன்று தலித் பெண். அவன் யார் மீது அட்ராக்ட் ஆவான் என்ற கோணம் பற்றியது. என் சாதி தாழ்வானது.
என்ற மனநிலையில் அதனால் என் சாதிப் பெண்ணை விட எனக்கு சாதி இந்துப் பெண் தான் பிடிக்கும் என்ற மனநிலையை நாம் இல்லை என்று சொல்லி விட முடியாது. அதே சமயம் அந்த மனநிலைக்கு காரணம் அந்த தலித் இளைஞன் என்று அவனை பொறுப்பாகவும் ஆக்க முடியாது. அதற்கு காரணம் பார்ப்பனியம்தாம். இதைத்தான் நான் சொல்ல வருகிறேன் சுகன்யா சொல்வதில் பாயிண்ட் இருக்கிறது. ஆனால் இந்த பதிவை அது திசை திருப்புகிறது என்று... நீங்கள் நான் சொன்ன பாயிண்ட் இருக்கிறது என்பதை பிடித்துக் கொண்டு யோசிக்காமல் நான் ஏதோ சாதிவெறி ஆதரிக்கும் கோணத்தில் சொல்வதாக சொல்லிக் கொண்டிருகிறீர்கள்


 Karthikeyan Fastura Vijay Bhaskarvijay இது தான் அரைகுறை புரிதல் என்பது. தலித் இளைஞனின் காதல் என்பது தாழ்வுமனப்பானமையால் அல்ல.

தலித் ஆண்கள் படித்து வரும் அளவிற்கு அளவிற்கு பெண்கள் இன்னும் வரவில்லை. தலித் பெண்களின் படிப்பிற்கு தடையாக உள்ள விசயங்களை பற்றி இங்கே விவாதிக்க வேண்டும்.

தலித் இளைஞன் வேலைபார்க்கும் இடத்தில் சாதி இந்து பெண்களுக்கு நிகராக தலித்பெண்களை இந்த சமூகம் கொண்டுவந்து சேர்த்தால் இந்த விகிதம் மாறாதா.. அவனிடம் இருக்கும் சாய்ஸ்ஸில் தலித் பெண்கள் வரவில்லை.

வேலைக்கு வரும் பெண்களில் 2% உள்ள பார்பனிய சமூகத்தில் வந்த பெண்களை விட பாதிக்கும் குறைவே 50% மக்கள்தொகை கொண்ட சாதி இந்துக்களில் இருந்து பெண்கள், அதனினும் பாதியில் தான் ஒடுக்கப்பட்ட பெண்கள் வேலைக்கு வருகிறார்கள்.

உங்கள் வாதத்தில் ஆண்கள் பெண்களை காதலிப்பது மட்டுமே உள்ளது. பெண்கள் ஆண்களை காதலிப்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை.

பள்ளி, கல்லூரி, பல்கலைகழகம் என்று பலபடிகளை தாண்டி ஒரு தலித் இளைஞன் வருவது எளிதாக தெரிகிறதா.. எத்தனை அவமானங்கள், நிராகரிப்புகள் இருக்கும். அதையெல்லாம் துடைத்து எறிந்துவிட்டு வேலைக்கு வரவேண்டும் என்றால் எத்தனை வெறி வேண்டும் தெரியுமா.. தாழ்வுமனப்பான்மை இருந்தால் அது முடியுமா.. இந்த சமூகம் திணிக்கும் தாழ்வுமனப்பான்மையை உடைத்து உடைத்து உடைத்து வந்தால் தான் அவன் வேலைக்கு வர முடியும் என்பதை யோசிக்கமாட்டீர்களா


Vijay Bhaskarvijay :புறக் காரணங்கள் பல இருக்கலாம். சட்டென்று மனதில் அவன் யாரை உயர்வாக நினைக்கிறான் என்ற உளவியல் முக்கியம்.. அதைத்தான் நான் தொடர்ச்சியாக அந்த உளவியலில் உண்மையும் இருக்கிறது. ஆனால் அந்த உளவியலுக்கு நாம் பொறுப்பில்லை பார்ப்பனியம்தான் பொறுப்பு என்று சொல்லி வருகிறேன்.

Karthikeyan Fastura இதற்கு கீழே உள்ள கமென்ட்டில் பதில் சொல்லியிருக்கிறேன். நிற ஈர்ப்பு பொது சமூக பிரச்சனை. அதை லாவகமாக படித்த தலித் பசங்களிடம் மட்டும் தள்ளவேண்டாம் என்கிறேன். இது பார்ப்பனியத்தையும் தாண்டிய உலக அளவில் விவாதிக்கப்பட வேண்டிய உளவியல். ஒரு சதவீதத்திற்கும் குறைவாக நிகழும் தலித் கலப்பு திருமணங்களில் நிற ஈர்ப்பை ஒரு காரணமாக சொல்வதும், அதற்கு தாழ்வுமனப்பான்மை தான் என்பதும் புரட்டு. அதற்கு நீங்கள் பலியாக வேண்டாம் என்கிறேன்.

நானோ சதவீதத்தில் உள்ள ஒரு தவறை நூறுசதவீதமாக காட்டுவது தான் பார்ப்பனீயம்.


Karthikeyan Fastura Vijay Bhaskarvijay விளக்கத் தெரியாமல் விளக்கி உங்க ஈகோவை கிளரிவிட்டேன் என்று நினைக்கிறேன். உங்கள் நோக்கத்தை, சாதிக்கெதிரான எண்ணத்தை நான் மறுக்கவில்லை. பாராட்டுகிறேன். இங்கே பொது புத்தி ஒருநாளில் திணிக்கப்படுவதில்லை. எவ்வளவு படித்தாலும் சில பொதுப்பார்வை போகாது. Ground Reality என்று ஒன்றிருக்கிறது. அது அத்தனையும் புத்தகத்தில் வந்திருக்காது. தலித் பசங்க தாழ்வுமனப்பான்மையால் தான் சாதி இந்து பெண்களை காதலிக்கிறார்கள் என்பது நுண்மையாக திரிக்கப்படும் கதை. அதை தான் இத்தனை கமெண்ட்டுகளில் தெளிவுபடுத்தமுயன்றேன். மற்றபடி உங்கள் சமூகநீதி பார்வைக்கு நான் பெரும் வாசகன்.

Vijay Bhaskarvijay Karthikeyan Fastura தலித்களே தலித்களை அடக்குகிறார்கள் போன்ற ஒரு பொதுப்புத்தி கருத்துதான் அது. அதில் நான் தெளிவாகவே இருக்கிறேன். அதை முதல் கமெண்டில் சொல்லவும் செய்திருக்கிறேன். நான் ஒரு ஃபிரிட்ஜ் செகண்ட் ஹாண்டில் விசாரித்து வாங்க நின்று கொண்டிருந்தேன். கடைககாரர் சொன்னார் “சார் இது இதுக்கு முன்னாடி ஐயர் வீட்ல இருந்த ஃப்ரிட்ஜ்” என்றார். ஐயர் வீட்டு ஃப்ரிட்ஜ் என்பது ஒரு உயர்வாக என் உள்ளத்தில் படியும் என்று அந்த கடைக்காரர் நினைத்தற்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. அது பார்ப்பனிய பிரச்சார வரலாறு. அந்த மனநிலையை ஆராயும் அதே நேரம் அதற்கான பொறுப்பை நானோ அந்த கடைக்காரரோ ஏற்றுக் கொள்ளவும் கூடாது. அதன் பொறுப்பை பார்ப்பனியமே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரம் அந்த உளவியலையும் ஆராயத்தானே வேண்டும். அதைத்தான் நான் அங்கே முதல் கமெண்டில் சுகன்யா சொல்வதில் பாயிண்ட் இருந்தாலும் என்று சொல்கிறேன். பாயிண்ட் இருந்தாலும் அது இப்பிரச்சனையை திசை திருப்புகிறது என்றும் சொல்லி இருக்கிறேன். என் ஈகோ இங்கே ஹர்ட் ஆகிறது ஆகவில்லை என்பதை விட ஒரு நுணுக்கமான ஒன்றை சொல்ல வந்து அதை எதிரே இருப்பவர் புரிந்து கொள்ளாத அயர்ச்சி இருக்கிறது. பெண் படைப்பாளிகள் கூட்டம் ஒன்றில் “பாலியல் வல்லுறவு செய்பவர்களை பன்மை தன்மையோடு அணுக முடியாதா” என்று சொல்ல, “இவன் பெண் வலி தெரியாமல் பேசுகிறான்” என்று ஒரே அடியாக அடித்தார்கள். அது போல உணர்கிறேன்.

Karthikeyan Fastura ஒழிவு திவசத்தே களி பட விவாதத்தில் நமக்குள் இருந்த அதே முரண்பாடு தான் இங்கேயும். உங்களை புரிந்துகொள்ள முடிகிறது. என்னை நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும். இப்படியே இதை நிறைவு செய்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக