ஞாயிறு, 7 ஜனவரி, 2018

தொலைக்காட்சிகளின் கள்ள மௌனம் ... யார் காலை நக்குவது என்பதில் போட்டி ..

Karthikeyan Fastura : மும்பையில் இரண்டு நாட்கள் நடந்த பந்த்தில் 700 கோடி வரை வணிக நட்டம். இதன் பிறகு அவசர அவசரமாக தலித்துகளின் மீதான தாக்குதலுக்கு அரசு நடவடிக்கை எடுக்கிறது. இனிமேல் நடக்காது என்று வாக்குறுதி கொடுக்கிறது. அம்பேத்காரின் பேரன் எடுத்த இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்து காவி அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. போராட்டம் தான் இங்கே உள்ள அழுக்கு சிஸ்டத்தை மாற்றுகிறது.
இது புரியாமல் ஒருவர் பினாத்துவதும், அதை மீடியாக்கள் ஓவர் ஹைப் கொடுப்பதும்..
சர்குலேசன் குறைவா இருக்குன்னா, TRP ரேட்டிங் குறைவா இருக்குன்னா மக்களிடம் செல்லுங்கள், பேசுங்கள். இங்கே சொல்லப்படாத பிரச்சனை, பேசப்படாத பிரச்சனை ஆயிரமாயிரம் உண்டு. போலிகளை வைத்து ஏமாற்றாதீர்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை தீவிரமாக செல்கிறது. அதைபற்றி நேற்றுவரை பெரிய விவாதம் நடந்ததாக தெரியவில்லை. மும்பை போராட்டத்தை பற்றியும் விவாதம் நடத்தவில்லை. காண்டம் விளம்பரம் டிவியில் வர கட்டுப்பாடு விதித்த மடத்தனத்தை பற்றி விவாதிக்கவில்லை, ஆதார் அட்டையின் ரகசிய காப்பு கேள்விக்குறியதாக மாறி இருக்கிறது. வெறும் 800 ரூபாய்க்கு நூறு கோடி மக்களின் ஆதார் கணக்கை தோண்டி எடுக்கும் சாப்ட்வேர் கள்ளசந்தையில் விற்கப்படுகிறது. இதையல்லவா விவாதம் செய்ய வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக