ஞாயிறு, 7 ஜனவரி, 2018

மலேசியாவில் நடிகர்களை செருப்பால் அடிக்கச் சொன்ன மலேசிய பத்திரிகை ..! பிச்சை பாத்திரம் ....

மக்கள் ஓசை :செருப்பால் அடித்து விரட்டுங்கள்” மலேசிய மண்ணில் பிச்சை எடுக்க சென்ற நடிகர்களை வெளுத்து வாங்கிய மலேசியப் பத்திரிக்கை..!! பாத்திரம் நிரப்ப பாத்திரம் ஏந்தும் தமிழ் நட்சத்திரங்கள் என்னும் தலைப்பில் கட்டுரை வெளியிட்டு மலேசியாவில் நடைபெறும் தமிழ் நட்சத்திர கலை விழாவிற்கு மலேசிய தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நாசர் தலைமையிலான உறுப்பினர்கள் பதவி வகிக்கின்றனர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? இவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது அளித்த முக்கிய வாக்குறுதியான நடிகர் சங்கம் கட்டடம் கட்டும் பணி, தற்போ தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நடிகர் சங்கம் கட்டட நிதி திரட்டுவதற்காக நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக 300-க்கும் மேற்பட்ட திரைநட்சத்திரங்கள் மலேசியா சென்றுள்ளனர். முன்னதாக நேற்று கோலாலம்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நட்சத்திர விளையாட்டு வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.  நடிகை ஷோபனா குழுவினரின் நாட்டியத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. ரஜினி புதிய கட்சி தொடங்கியுள்ளார். கமல் புதிய கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில் மலேசிய நட்சத்திர கலைவிழாவில் இருவரும் என்ன பேசுவார்கள், கமல் தனது அரசியல் கட்சி பற்றி அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து இந்த நட்சத்திர கலைவிழாவில் கலந்து  கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக