சனி, 20 ஜனவரி, 2018

கன்னட நடிகை சுருதி தமிழ் பட தயாரிப்பாளர் மீது ... பகீர் குற்றச்சாட்டு

வெப்துனியா :பிரபல கன்னட நடிகை ஸ்ருதி சமீபத்தில் இந்தியா டுடே ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியபோது, 'நான் கன்னடத்தில் நடித்த படம் ஒன்று சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்க முடிவு செய்த ஒரு தயாரிப்பாளர் என்னையே தமிழிலும் நடிக்க அழைப்பு விடுத்தார். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை தன்னுடன் நான்கு பேர் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும், அந்த நான்கு பேர்களுடன் அவ்வப்போது படுக்கையை பகிர்ந்து கொண்டால் இந்த வாய்ப்பை தான் தர தயார் என்றும் அந்த பிரபல தயாரிப்பாளர் கூறினார். அதற்கு நான் என்னுடைய செருப்பை கழட்டி அந்த தயாரிப்பாளருக்கு காண்பித்தேன்' என்று ஸ்ருதி இந்த நிகழ்ச்சியில் பேசினார்

ஸ்ருதியின் இந்த பகீர் வாக்குமூலம் தமிழ் மற்றும் கன்னட திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சமீபகாலமாகவே இந்த படுக்கை சமாச்சாரத்தை கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகைகள் பகிரங்கமாக கூறி வருவதால் தற்போது நடிகைகளை படுக்கைக்கு அழைக்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தயங்குவதாகவும் இந்த துணிச்சலான நடவடிக்கை தொடர வேண்டும் என்றும் திரையுலகினர் கூறி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக