புதன், 31 ஜனவரி, 2018

எட்டு மாத குழந்தையை சீரழித்தவன் கைது

தினமலர் :புதுடில்லி: தலைநகர் டில்லியில் 8 மாத பெண் குழந்தையை, 28 6 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. டில்லியின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகர் பகுதியை சேர்ந்த பெண், தன், எட்டு மாத பெண் குழந்தையை, உறவினர் வீட்டில் விட்டு, வேலைக்கு சென்றார். அந்த வீட்டில் இருந்த, 26 வயதுடைய உறவுக்கார இளைஞன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மது அருந்திவிட்டு, பிஞ்சு குழந்தையை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். வேலை முடிந்து திரும்பிய தாய், குழந்தையின் மர்ம உறுப்பிலிருந்து ரத்தம் வடிந்ததால் அதிர்ச்சி அடைந்தார். டாக்டரிடம் அழைத்து சென்றபோது, குழந்தை பலாத்காரத்துக்கு ஆளானது தெரிய வந்தது. போலீஸ் விசாரணையில் குற்றவாளி யார் என தெரிய வந்ததை அடுத்து, உறவுக்கார இளைஞனை போலீசார் கைது செய்தனர்.
மருத்துவமனையில் குழந்தைக்கு 3 மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர், தற்போது குழந்தை அபாய கட்டத்தை தாண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக