புதன், 31 ஜனவரி, 2018

கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்க வைத்த தமிழக அரசு! தீவிரமடையும் மாணவர் போராட்டம்

நக்கீரன்: வேலூர் முத்துரங்கம்  அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று (30.1.18) காலை கல்லூரிக்குள் செல்லாமல் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல் செய்தனர்.>இதனை கலைக்க போலீஸ் லத்தியை கொண்டு மாணவர்களை கொடூரமாக அடித்து விரட்டியது. அடிவாங்கிக்கொண்டு போராட்டத்தில் முன்னின்ற சில மாணவர்களை பிடித்து இழுத்து சென்று போலீஸ் ஜீப்பில் அடைத்தனர். அவர்களிடம் பெயர், முகவரி வாங்கி வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
;இதனை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் அரசையும், காவல்துறையையும் கண்டித்தார்.>மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டி நாளை அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட முத்துரங்கம் கலைக்கல்லூரி மாணவர்கள் முடிவு செய்தனர். இந்த தகவலை மோப்பம் பிடித்த உளவுத்துறை இதுக்குறித்து அவசரம் அவசரமாக தலைமைக்கு நோட் போட்டது. அதோடு நாளை நடைபெறும் போராட்டத்தில் திமுக ஆதரவு தர முடிவு செய்துள்ளது, அப்படி நடந்தால் போராட்டம் இன்னும் தீவிரமாகும் என்றது அந்த குறிப்பு.
;இந்த குறிப்பை பார்த்து அதிர்ந்த அரசு உடனடியாக உயர்கல்வித்துறை மூலமாக வேலூரில் உள்ள கல்லூரிகள் துணை இயக்குநர் அலுவலகத்துக்கு வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரிக்கு வரும் 4 ந் தேதி வரை விடுமுறை அளிக்க உத்தரவிட்டது. அவர்களும் முதல்வரிடம் கூற அவசரம் அவசரமாக இன்று மாலை விடுமுறை அறிவிக்கப்பட்டு அறிவிப்பு நோட்டீஸ் கல்லூரி நுழைவாயிலில் ஒட்டப்பட்டது.>மாணவர் போராட்டத்தை கண்டு பயந்து அரசு கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.< ராஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக