ஞாயிறு, 17 டிசம்பர், 2017

இந்தியப் பெண்களுக்கு செக் வைத்த ட்ரம்ப்.. H-4 விசாவின் வேலைவாய்ப்பிற்கான கோரிக்கை..

இந்தியப் பெண்களுக்கு செக் வைத்த ட்ரம்ப்மின்னம்பலம் :அமெரிக்காவில் H-4 விசாவின் வேலைவாய்ப்பிற்கான கோரிக்கையை அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அரசு நிராகரித்துள்ளதால், அங்குள்ள இந்தியப் பெண்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு H-1B விசாவில் வேலைக்குச் செல்பவர்களின் துணைவி மற்றும் 21 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு H-4 விசாக்கள் வழங்கப்படும். கடந்த 2015ஆம் ஆண்டு பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தின்போது H-4 விசா உடையவர்கள் வேலை செய்ய அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 14ஆம் தேதியன்று அமெரிக்காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் "அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஏப்ரல் மாதம் கையெழுத்திட்ட ’அமெரிக்க பொருட்களை வாங்குங்கள், அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள்’ என்ற கொள்கையின் அடிப்படையில் H-4 விசாக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சட்டம் இந்த ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது என்று” கூறியுள்ளது. இச்சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான மற்ற எந்தவொரு விளக்கமும் இத்துறையினரால் அளிக்கப்படவில்லை.

அமெரிக்காவில் H-1B என்ற விசா, மற்ற நாட்டிலிருந்து அந்நாட்டிற்கு வந்து வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படும் விசாவாகும். இதனை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 85,000 H-1B விசாக்கள் அமெரிக்க அரசால் வழங்கப்படும். இவற்றைப் பெரும்பாலும் பெறுபவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்களே. கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்த வகை விசாக்களை புதிப்பித்துக் கொள்ளும் சட்டங்களை அமெரிக்க அரசு கடுமையாக்கியுள்ளது. அதன்படி அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவுச் சேவைகள் வழங்கும் மையங்கள் அதன் அதிகாரிகளுக்கு விசா புதுப்பிக்க விண்ணப்பம் செய்பவர்களை மறுஆய்வு செய்யக் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக