நக்கீரன்: :கண்களும், விரல்களும் இல்லாத காரணத்தால் ஆதார் பெறமுடியாத தொழுநோயாளி ஒருவருக்கு பென்சன் ரத்தான அவலம் நிகழ்ந்துள்ளது. பெங்களூருவில்
உள்ள தொழுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் சஜிதா பேகம் (வயது
65). இவர் கடந்த பத்து ஆண்டுகளாக தொழுநோய் பாதிப்பு காரணமாக அந்த
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில தினங்களாக அவரது
குடும்பத்தினர் அவரைப் பார்க்கச் செல்வதில்லை. அவரது கை மற்றும் கால்
விரல்கள் தொழுநோயால் சிதைந்துவிட்டன. வயது காரணமாக பார்வையையும்
இழந்துவிட்டார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் ராஜாஜிநகர் உதவி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து, தங்களது ஆதார் விபரங்களை சமர்ப்பிக்காததால் பென்சன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் முதல் உங்களுக்கு பென்சன் கிடைக்காது என கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
தனது குடும்பத்தினர் உதவி இல்லாத சூழலில் தனக்கு கிடைத்துக் கொண்டிருந்த பென்சனும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் நிர்கதியாக நிற்கிறேன் எனக்கூறி கதறி அழுதுள்ளார் சஜிதா பேகம். இதுகுறித்து ஆதார் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ள தொழுநோய் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர், அவரது இயலாமையைக் கருத்தில் கொள்ளவேண்டும் எனக் கோரியுள்ளார்.
ஆதார் குறித்த பெருமைகளைப் பேசும் மத்திய அரசோ, அதன் தலைமைப் பீடத்தில் இருக்கும் பிரதமரோ ஆதாரால் துயரைச் சந்தித்திருக்கும் பொதுமக்களையும் கொஞ்சம் நினைத்துப் பார்க்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக