சனி, 2 டிசம்பர், 2017

ஆர் கே நகரில் நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டி

tamilthehindu : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக விஷால் தெரிவித்திருக்கிறார்.
ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. டிசம்பர் 21-ம் தேதி வாக்குப்பதிவும், 24-ம் தேதி தேர்தல் முடிவும் வெளியாகவுள்ளது. < ரஜினி மற்றும் கமல் இருவருமே அரசியலில் இறங்கவுள்ளதால், ஆர்.கே.நகர் தேர்தலில் இவர்களுடைய பங்களிப்பு என்பது சுத்தமாக இருக்காது என்று கருதப்படுகிறது. இந்நிலையில் ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக விஷால் போட்டியிடவுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. டிசம்பர் 4-ம் தேதி மனுத்தாக்கல் செய்யவும் விஷால் முடிவு செய்திருக்கிறார்.
ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், டிடிவி தினகரன், பாஜக  என நான்குமுனைப் போட்டி நிலவி வந்த நிலையில் விஷால் போட்டியிடுவதால் தற்போது ஐந்துமுனைப் போட்டி உருவாகியுள்ளது.

முன்னதாக ஆர்.கே.நகரில் போட்டியிடவுள்ளது குறித்து விஷால் தரப்பில் விசாரித்த போது, "விஷாலிடம் சில கட்சிகள் பேச்சுநடத்தி வருவது உண்மைத் தான். ஆனால், போட்டியிடுவது குறித்து அவர் எந்தவொரு முடிவையுமே எடுக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்கள். தற்போது எந்தவொரு கட்சி சார்புமின்றி சுயேட்சையாக களமறிங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக