சனி, 2 டிசம்பர், 2017

ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் போட்டி

tamilthehindu : ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் களமிறக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர டிடிவி தினகரன், ஜே.தீபா, கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட வேட்பாளர்களுடன் நடிகர் விஷாலும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக சார்பில் யார் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என்று தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். Keywords ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கரு.நாகராஜ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக