திங்கள், 11 டிசம்பர், 2017

ஆர் கே நகரில் பணப்பட்டுவாடா ... தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படுமா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி கடந்த மாதம் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.5.21 லட்சம் ரொக்கப் பணத்தைப் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும், வாகனங்களில் கொண்டுவரப்பட்ட பணத்துக்கான ஆவணங்களோ, ஆதாரங்களோ ஏதும் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், விதிமீறல்கள் தொடர்பாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 148 புகார்கள் வந்துள்ளன. அதில் 142 புகார்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக 15 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடைபெறுவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். எனவே, மீண்டும் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக