திங்கள், 11 டிசம்பர், 2017

மம்தாவின் 6 எம் எல் ஏக்களுக்கு பாஜகவில் உடன் அங்கத்துவம் அங்கீகாரம் ! Six axed Trinamool MLAs recognised as BJP legislators

தினமலர் :அகர்தலா:திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகிய 6 எம்.எல்.ஏ.க்கள் இந்திய அரசியல் சட்டம் 10வது அட்டவணை வழங்கியுள்ள வழிமுறைகளின்படி பா.ஜ., உறுப்பினர்களாக அங்கீகரிப்பதாக திரிபுரா சட்டசபை சபாநாயகர் தெரிவித்தார்.திரிபுரா சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்களாக இருந்த 6 பேர், கடந்த ஆண்டு திரிணமுல் காங்கிரசில் சேர்ந்தார்கள். பின்னர் அங்கிருந்து விலகி கடந்த ஏப்ரல் மாதம் பா.ஜ.வில் இணைந்தனர். பின்னர் தங்களை பா.ஜ., எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்க வேண்டும் என சபாநாயகர் ரமேந்திர சந்திர தேப்நாத்திடம் மனு அளித்தனர்.அதன்படி,இந்திய அரசியல் சட்டம் 10வது அட்டவணை வழங்கியுள்ள வழிமுறைகளின்படி ஆய்வு செய்த சபாநாயகர், 6 எம்.எல்.ஏ.க்களையும் பா.ஜ., உறுப்பினர்களாக அங்கீகரித்தார்.
6 உறுப்பினர்களும் திரிணமுல் காங்கிரசுடனான உறவுகளை முறித்துக்கொண்டு பா.ஜ.,வில் இணைந்திருக்கும் நிலையில், அவர்களை பா.ஜ., உறுப்பினர்கள் என அங்கீகரிப்பது என அவர் முடிவு செய்துள்ளதாக சட்டசபை செயலாளர் மஜூம்தார் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக