திங்கள், 11 டிசம்பர், 2017

ஜெயலலிதா... நீத்தார் பெருமை பேசாவிடினும் வரலாறு முக்கியம் வாக்காளர்களே

Thamizh Inian : *திருமதி ஜெயலலிதா அவர்கள் முதன் முதலாக சட்டமன்றத்தில் தனது சேலையை துரைமுருகன் பிடித்து இழுத்தார் என்று பழியைப் போட்டது.....*
*கவர்னர் மாளிகையில் கைத்தடி ஊன்றி நடந்த, 80 வயது முதியவரான கவர்னர் சென்னாரெட்டி, தன்னை மானபங்கம் படுத்தியதாக, கூறி அதிரடித்தது!!!*
*ஐபிஎஸ் சந்திரலேகா என்ற பெண்ணின் முகத்தில் ஆசிட் அடிக்க வைத்ததும் இல்லாமல் அதற்கு உதவிய மும்பை கூலிப்படையை சேர்ந்த சுர்லாவை காப்பற்ற போராடியது!!!*
*எம்ஜியாரை மோரில் விஷம் வைத்து கொன்றார் என்று அவரின் மனைவியான ஜானகி மீது அபாண்ட பழிபோட்டது!!!*
*எம்.ஜி.ஆரின் உதவியாளர் முத்து என்பவர் மீது கஞ்சா கேஸ் போட்டு பழிவாங்கியது!!!*
*சசிகலா கணவர் நடராஜனுக்கு நெருக்கமாக இருக்கிறார் என்ற காரணத்தினால் செரினா என்ற பெண்ணின் மீது பொய் கஞ்சா வழக்கு போட்டு கைது செய்து கொடுமைப்படுத்தி, கோர்ட்டுக்கும் ஜெயிலுக்கும் ஓட விட்டது!!*
*உயர்நீதிமன்ற நீதிபதி சீனிவாசன் வீட்டுக்கு மின் இணைப்பையும் குடிநீர் இணைப்பையும் நிறுத்தியது!!!*
*வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம் மற்றும் விஜயன் மீதான தாக்குதல்,*
*தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மீதான தாக்குதல்,*
*அமைச்சர் ப.சிதம்பரம் மீது தாக்குதல்.!!!*

*நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மருமகன் மீது கஞ்சா வழக்கு போட்டது!!!*
*தனது ஆடிட்டரை செருப்பால் அடித்து துவைத்தது!!!*
*சிவந்தி ஆதித்தனை பார்க்க வந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் காலணிக்கு மேல் மேலுரை மாட்டி வார்டிற்குள் வரும்படி சொன்னதற்காக, கருணாநிதி என்ற மூத்த மருத்துவரை பொய் வழக்கு போட்டு இரவோடு இரவாக சிறைக்கு அனுபியவது!!*
*தனக்கு எதிராக பேசினார்கள், எழுதினார்கள் என்று சொல்லி நூற்றுகணக்கான பத்திரிக்கையாளர்கள் மீது அவதூறு வழக்குகளை!!!*
*தருமபுரியில் மூன்று மாணவிகளை (பெண்களை) உயிருடன் கொளுத்திய குற்றவாளிகளை காப்பற்ற சாட்சிகளை மிரட்டியது!!!*
*தன்னுடைய வளர்ப்பு மகன் சுதாகர் மீதே வழக்குப் போட்டு, அவர் சம்பந்தம் வைத்துக் கொண்ட நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு மிகப்பெரிய மன அதிர்ச்சியை கொடுத்தது!!!*
*நடு இரவில் வீடு புகுந்து ஆண் பெண் பேதமின்றி அரசு அலுவலர்களை அள்ளிச் சென்றது*
*உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், ஆயிரகணக்கான சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்காமல், பலரை தற்கொலைக்கு தள்ளியது.....*
*சோனியா என்கிற பெண் தலைவரை, "பதி பக்தி" இல்லாதவர் என்று அவதூறு செய்தது!!!*
*சிறப்பாக கட்டப்பட்ட புதிய தலைமை செயலக கட்டிடத்தை முடக்கி அங்கு மருத்துவமனை ஆரம்பிக்கிறேன்னு அறிவித்தது*
*ஆசியாவிலே மிகப்பெரிய தலைசிறந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முடக்க படாதபாடுபட்டதும் அதை காப்பாற்ற திமுக நீதிமன்ற படிகள் ஏறி அந்த நூலகத்தை காப்பாற்றியது*
*திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்பதே தவிர 2 தலைசிறந்த கட்டிடங்களை முடக்க காரணம்....*
*இன்னும் ஏராளமான கதை உண்டு......*
*பெண், முதியவர், இறந்தவர்களை விமர்சிக்ககூடாது எனும் நமது பண்பாடு.அது சரியா?தவறா?என்பது வேறு.....*
*ஆனால் உலகமகா அசிங்கத்தை தியாகியாக மாற்ற முயற்சிப்பது உண்மையான தியாகிகளுக்கு நாம் செய்யும் துரோகம்*
*அதுமட்டுமின்றி....*
*தமிழக மக்கள் மீண்டும் செண்டிமண்ட் எனும் மாயையில் வீழ்ந்து தனது சுயசிந்தனையை இழந்து ஏமாளியாய் ,கோமாளியாய் வாழ வழி வகுக்கும் என்கிற பயம் தான் தற்போதய நிலைப்பாடு.....*
*எனவேதான் இதையெல்லாம் திரும்ப திரும்ப சொல்லவேண்டியுள்ளது...*
*இனிமேலாவது மக்கள் திருந்துவார்களா..ப.பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக